பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் காரண புவன போகங்களைத் தந்து உயிரை அவற்றோடு பிணிப்புண்டு நிற்கச் செய்து துணைபுரிதலாகும், ஆணவமலம் உமிபோல் நின்று போத்திருவத்தைப் பண்ணுதலாவது, உமி (முளைத்தற் சக்தி) முளையைத் தோற்று வித்தற்கு அச்சக்தியைக் கெடாது காத்து நின்று நிமித்தமாதல் போல, இன்பதுன்பங்களைத் தோற்றுவிக்கின்ற கன்ம மலம் உயிரைவிட்டு நீங்காதவாறு விருப்பு வெறுப்புகளால் உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுத்து அக்கன்மத்தை நிலை நிறுத்தி நிமித்த மாதலாகும். போத்திருத்துவம் என்பது புசிப் போனாந்தன்மை. ஆகவே, முளைத்தல்' என்னும் செயலுக்கு முளைத் தல் சக்தி முதற்காரணமும், தவிடு துணைக்காரணமும், உமி நிமித்த காரணமுமாதல் போல, இன்பதுன்ப அநுபவமாகிய காரியத்திற்குக் கன்மமலம் முதற்காரணமும், மாயாமலம் துணைக்காரணமும், ஆணவமலம் நிமித்த காரணமும் ஆதல் தெளிவாகும். இன்னும் நிமித்த காரணம் இல்லாது முதற் காரணமும், துணைக்காரணமும், செயற்படாவாதலின், நிமித்த காரணமாகிய ஆணவமலம் உள்ளவரையில் பலவகை உலகங்களில், பலவகைப் பிறப்புகளில், பிறந்தும், இறந்தும், இன்பதுன்பங்களை அநுபவிக்கின்ற பந்தநிலை நீங்காது என்பதும், ஆணவமலம் நீங்கும் பொழுது ஏனைய மலங்களும் நீங்க, பிறப்பிறப்பாகிய பந்தமும் நீங்கி வீடுபேறு உண்டாகும் என்பதும் நன்கு புலனாவனவாம். . இங்குக் குறிப்பிட்ட ஐந்து மலங்களும் நீங்காமல் இறைவன் திருவடிப்பேற்றை அடைதல் இயலாது. எனவே, இவை நீங்குவதற்கு வேண்டிய முயற்சியை மேற்கொள்ளலே உயிர்களின் கடமையாதல் தெளியப்படும். -