பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் - 275 இவற்றுள் வேதங்கள் பொதுநூல்கள், ஆகவே அவை நன்னெறியைப் பொதுவாக உணர்த்தி மெய்ந்நெறியிற் கொண்டு உய்க்கத்தக்க உலகியலில் நிற்பிக்கும். சிவாகமங்கள் சிறப்பு நூல்கள் ஆதலின், அவை நன்னெறியைச் சிறப்பு வகையான் உணர்த்தி, மெய்ந்நெறியிலே கொண்டு செலுத்தும், சைவசமயம்: சிவாகமத்தால் பெறப்படுவதாய நெறி “சைவ சமயம்’ எனப்படும். இந்நெறியில் சிவாகமத்தின் வழியமைந்த நெறி நான்கு இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று வழங்கப்பெறும். சிவஞானசித்தியார் சன்மார்க் கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாதமார்க்கம் என்றும் கூறி இவை முறையே ஞானம், யோகம், சரியை, கிரியை என வழங்கப்பெறும் என்னும் குறிப்பிடும். இவற்றையே நற்றமி ழில் கூறும்போது சன்மார்க்கத்தை நன்னெறி என்றும், சகமார்க் கத்தைத் தோழமை நெறி என்றும், சற்புத்திர மார்க்கத்தை மகன்மை நெறி என்றும், தாத மார்க்கத்தைத் தொண்டுநெறி என்றும் வழங்குவர். இவற்றிற்கு முறையே மணிவாசகப் பெருமான், சுந்தரமூர்த்தி, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்வர் சைவநெறி யொழுகும் பெரியார்கள். முத்தியாகிய, பெரும்பயனுக்கு ஞானம் ஒன்றே வாயிலாகும். ஏனைய பலவும் ஞானத்தை அடைவதற்கு வழியேயன்றி, நேரே வாயிலாவன அல்ல என்பது ஈண்டு அறியப்பெறும். வேள்வி, தானம், பிறகருமங்கள், செபம், தீக்கை முதலிய எவையாயினும் அவையெல்லாம் ஞானத் தைத் தந்து, பின்னர் அதன்மூலம், முத்தியை நல்குமன்றி, 2. சித்தியார். 8.18 3. வைணவத்தில் கருமயோகம் ஞானயோகம், என்பவை பக்தியோகத்திற்கு வாயில்களாக அமைவது போல.