பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 279 லிருந்து நீங்கும்நிலையை அடைகின்றது. இந்நிலையே 'மலபரிபாகம்’ என்று வழங்கப் பெறுவது. சித்துப் பொருளின் ஆற்றல் மெலிவடையாதிருத்தலையும், சடப்பொருளின் ஆற்றல் மெலிவடைவதையும் நாம் அறிவோம். . (i) இருவினையொப்பு: மனிதனுக்கு நேரிடும் இன்ப துன்பங்கள் வினைப்பயனால் நேரிடுகின்றன. இதனை அறியாது இன்பம் வருங்கால் அவன் எக்களிப்படைவதும், துன்பம் நேருங்கால் அளவுக்கு மீறி மனம் ஒடுங்குவதும் அவன் இயல்புகளாகப் பரிசிைமிக்கின்றன. இதனை நினைந்து வள்ளுவர் பெருமான், - நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற படுவ தெவன்? (379) என்று பரிதாபப் படுகின்றார். மேற்கூறியவாறு ஆணவமலம் பரிபாகமாதற்பொருட்டே அதற்கு அதன் மறுதலைப் பொருளாகிய கன்மம், மாயை என்பவற்றை உயிர்களுக்குக் கூட்டுகின்றான் இறைவன். கூட்டவே, அவை பிறப்பு இறப்புகளில் சென்று கன்மங்களை ஈட்டச் செய்கின்றன. இவற்றின் பயனாக உயிர்கள் இன்ப துன்பங்களை நுகர்கின்றன. இதனால் மறைக்கும் தன்மையை யுடைய ஆணவமலத்தின் ஆற்றல் மெலிவடைந்து மலபரி பாகம் ஏற்படுங்கால் இருவினையொப்பு தோன்றுகின்றது. இருவினைப் யொப்பு என்பது என்ன? ஒருவன் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாதிருத்தல். இன்பத்தில் விருப்பமும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாதிருத் தல், இரண்டையும் சமமாகப் பாவித்து நுகரும் நிலை என்று இந்நிலையை விளக்கலாம். சேக்கிழார் பெருமான் சிவனடி யார் மனநிலையை,