பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 283 நல்குபவனும் பிறவாயாக்கைப் பெரியோனாகிய." சிவபெரு மான் ஒருவனே யாவான். துன்பத்தை ஒட்டுகின்ற காரணத்தால் உருத்திரன் என்றும், இன்பத்தைத் தருகின்ற காரணம் பற்றிச் 'சங்கரன் சம்பு’ என்றும் பெயர்களைப் பெறுகின்றான். சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவம் வேறு பயன்களை யும் தரும்; முத்திக்கு ஏதுவாயும் நிற்கும். இதுபற்றியே மெய்கண்டார் இத்தவத்தை இறப்பில் தவம்’ என்று சிறப்பிப்பர். ஒரு முக்கிய கருத்து. சிவபெருமான் ஒருவனே பதி, ஏனைய யாவரும் பசுக்கள்’ என்பதை நாம் அறிவோம். அதனால் சிவபெருமானை நோக்கிச் செய்யப்பெறும் நற். செயல்கள் பதி புண்ணியங்கள் எனப்படும் இவை சிவ புண்ணியங்கள் எனவும் வழங்கப் பெறுதலும் இயல்பே யாகும். சிவ புண்ணியங்களே அழிவின்றி நிலைத்து முத்தியைத் தருவனவாகும். பசுபுண்ணியங்கள் அவ்வாறின்றித் தமக்குரிய சில பலன்களைத் தந்து அழிந்து படும். அவை அழியவே, அவற்றின் பலன்களும் அழிந்தொழியும். அதனால் அவற்றைச் செய்த்ாரைத் துன்பங்கள் மிகவும் வந்து பற்றும். ஆகவே, பசு புண்ணியங்களைச் செய்தல் இவ்வுலக உணவை உண்டு பசி தணிதல் போலாகும். பசித்துண்டு பின்னும் பசிப்பானைப் போக்கும் - இசைத்து வருவினையில் இன்பம்" என்பர் மெய்கண்டார். இதனைச் சிந்திக்க வேண்டும். சிவபுண்ணியங்களோ அங்ங்னம் அன்று. உம்பர் உலக உணவாகிய அமுதத்தை உண்டது போல்வன அவை. 15.வைணவம் தம் கடவுளை பிறப்பில் பல்பிறவிப் பெருமான் என்று குறிப்பிடும். நம்போல் வினை காரணமாகப் பிறப்பவன் அல்லன்; தம் விருப்பம் காரணமாக, அடியார்களின் துன்பங்களை நீக்குவதற்காகப் பிறப்பவன் (அவதாரம்). 16. சி. ஞா. போ. சூத்திரம் 8. அதிகரணம்-1