பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29() சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் கின்றன என்று கூறலாம். திருக்கோயிலிலுள்ள இலிங்கம் அருவுருவத்திருமேனியையும் புறத்தொழில் அளவில் வழி படுவதால் அவ்வழிபாடும் சரியையில் அடங்கி விடுகின்றது. இவ்வழிபாட்டில் திருக்கோயில் திருவலகிடுதல் முதலாயின சரியையில் சரியை எனவும், ஒரு மூர்த்தியை வழிபடுதல் சரியையில் கிரியை எனவும், வழிபடு கடவுளை யும் சிவபெருமானையும் தியானித்தல் சரியையில் யோகம் எனவும் கொள்ளப்பெறுகின்றன. இச்செயல்களால் ஒர் அநுபவம் வாய்க்கப்பெறுதல் சரியையில் ஞானம் ஆகும் என்பதும் ஈண்டு அறியப்படும். . கிரியை சிவபெருமானின் அறிவுருவத்திருமேனி யாகிய இலிங்க மூர்த்தத்தை அணுகியிருந்து அதன்கண் அப்பெருமானை மந்தரம், கிரியை, பாவனை' என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் பலவகை உபசாரங் களையும் முறைப்படி செய்து வழிபடுதலே கிரியை எனப் படும். திருமுழுக்கு (அபிடேகம்), ஆடை அணிகலன், சந் தனம், மலர் முதலியவற்றால் செய்யும் ஒப்பனை (அலங்காரம்); படையல் நிவேதனம்) புகை, ஒளி தூபம், தீபம்), குடை, கொடி, கண்ணாடி, கவரி முதலிய மங்கலப் பொருள்கள் இவற்றை ஏற்பித்து வலம் (பிரதட்சிணம்) வருதல், அடிபணி தல் (நமஸ்காரம்), புகழ்ச்சி (தோத்திரம்) என்பவற்றைச் செய்து வேண்டி (பிரார்த்தித்து நிற்றல் என்னும் இவ்வகை அணுக்கத் தொண்டுகள் கிரியையுள் அடங்கும். சரியை நிலையிலும் திருமுழுக்கு முதலியவற்றைச் செய்யினும் அவை மேற்குறிப் பிட்ட மந்திரம் மூன்றானும் அகத்தும் புறத்தும் நிகழாது செயலளவில் புறத்து மட்டிலும் நிகழ்தலின் அவை கிரியை எனப்படுதல் இல்லை. - . . . .