பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் - - 295 தில்லை. ஆகவே, இம் மூன்று மார்க்கங்களும் இறுதி மார்க்கமான ஞான மார்க்கத்திற்கான ஏற்பாடுகளேயாகும். வேறுவிதமாகவும். சிவபுண்ணியவகைகள் வேறுவித மாகவும் பகுத்துப் பேசப்பெறும். இறப்பில் தவங்களாகிய சரியை கிரியை யோகம் ஆகியவை அடத்தி பூர்வமாகவும் பொதுவாகவும் உண்மையன்றியும் நிகழ்தல் உண்டு. அபுத்திபூர்வமானது: ஒருவன் தான் சிவபுண்ணியத் தைச் செய்கின்றதான உணர்வு இல்லாமல் செய்யும் சிவ புண்ணியம் அபுத்தி பூர்வ சிவபுண்ணியம் எனப்படும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு: சிவாலயம் ஒன்றில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கு அணையும் நிலையில் இருந்தது. எலியொன்று விளக்கிலிருந்த நெய்யை உண்ணச் சென்றது. விளக்கில் வாய் வைக்கும்போது அது சுட்டது. உடனே வாயை எடுத்த பொழுது விளக்கும் தானாகத் தூண்டப்பெற்று நன்கு எரிந்தது. இதுவே அவ்வெலிக்கு விளக்கிலிட்ட சிவபுண்ணிய மாக அமைந்தது. இதுகாரணமாக அந்த எலி மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பது வரலாறு. அபுத்தி புண்ணியமும் பலன் தருகின்றது என்ற உண்மை இதனால் பெறப் படுகின்றது. 毫 மக்களிலும் இது போன்ற செயல்களைச் செய்வாரும் உளர். அங்காடித் தெருவில் மலர் முதலியன விற்பவர்கட்கு இத்தகைய அடத்திபூர்வ சிவபுண்ணியம் நிகழ்தல் உண்டு. மலர் விற்றுப் பிழைப்பவர் அதன் பொருட்டுப் பூந்தோட்டங்களை வைத்துப் பாதுகாத்துப் பூப்பறித்துத் தொடுத்து விற்கின்றனர். இதனைச் சிலர் வாங்கிச் சென்று சிவபெருமானுக்குத் தாமே சாத்தியும், குருக்களால் சாத்துவித்தும் வழிபடுவதைக் காணலாம். இதனால் பூவிற்றவர்க்கு அவர் அறியாமலேயே அபுத்தி பூர்வ புண்ணியம் அவரை வந்தடைகின்றது. விலை