பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கொடுத்து வாங்கப்பெறும் மலரும் பிறவும் கொண்டு வழிபடுபவர் பொதுச் சிவபுண்ணியம் செய்பவராகின்றனர். மலர் தவிர, தேங்காய், பழம், ஊதுவத்தி, கர்ப்பூரம் முதலிய பிறபொருள்களையும் சிவாலய்ங்களில் நடைபெறும் பூச னைக்கு உரிய பிற பொருள்களையும் விற்பவர்கட்கும், அன்றாடக் கூலி பெற்றுத் திருப்பணி செய்பவர்கட்கும் இவர் போல்வார் பிறர்க்கும் அபுத்தி பூர்வ சிவபுண்ணியங்கள் உண்டாகும். இக் கூறியவை போலன்றி அன்பு காரணமாகவே சிவப் பணிக்கு மேற்கூறியவாறு உதவினாலும் அன்றிச் சிவபெரு மானைத் தாமே வழிபடினும், அப்பெருமானின் முழுத்தன்மை உணராமல் அவனையும் பிறதேவர்களோடு ஒப்பவைத்து வழிபடினும் அதனால் வரும் சிவபுண்ணியமும் அபுத்திபூர்வ சிவபுண்ணியமேயாகும். காரணம், பதிபுண்ணியம் என்பது பசுக்களது தன்மையினையும் பதியினது தன்மையினையும் வேறுபடுத்தி நன்குணர்ந்து அவ்வுணர்வு காரணமாகப் பசுக்கள் மாட்டு அன்பு நிகழாது பதியினிடத்து அன்பு நிகழப்பெறுத லன்றி உண்மையாக நிகழாமையே என்பதாகும். எனினும், இவை முன்னர்க் குறிப்பிட்டவை போலன்றிச் சிறிது உணர்வு பெற்றுச் செய்யப்பெறுவதால் அவற்றினும் இவை சிறப்புடை யனவாகின்றன. புத்திபூர்வமானது. சிவபெருமானது முழுமுதல் தன் மையை உணர்ந்து அவனுக்குத் தொண்டு புரிய வேண்டும் எனக் கருதி மேற்குறிப்பிட்ட சரியை, கிரியை யோகம் ஆகியவற்றைச் செய்தல் ‘புத்தி பூர்வ சிவபுண்ணியம்’ எனப்படும். புத்திபூர்வமாகச் செய்யப்பெறும் சிவபுண்ணியங்களும் பொது, சிறப்பு என இருவகையாகின்றன. ஒருவர் நல்லாசிரி