பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 297 யரிடம் தீக்கை பெற்று, அவற்றைச் செய்யும் தகுதி பெற்று, செய்யும் முறையறிந்து அம்முறைப்படி செய்பவை சிறப்புச் சிவபுண்ணியங்களாகும். அங்ங்ணமின்றித் தாமே தமக்குத் தோன்றியவாறு செய்யின் அவை பொதுச் சிவபுண்ணியங் களாகின்றன. பிறிதொருவிதமாகவும் சிவபுண்ணியங்கள் வகைப் படுத்தப்பெறுகின்றன. தீக்கை பெற்றேனும் பெறாமலேனும் சரியை கிரியை யோதங்களாகிய சிவபுண்ணியங்களைச் செய்வோர் அனைவரும் அப்பெருமானிடம் கொண்ட அன்பு காரணமாகப் பயன் கருதாது செய்கின்றனர் என்று சொல்ல முடியாது. பலர் தம் செயலுக்குப் பயனாகக் கல்வி, செல்வம், வெற்றி புகழ், மனை, மக்கள் முதலிய உலகியல் பயன்களுள் ஒன்றேயோ பலவற்றையோ விரும்பிச் செய்பவர்கள். இவர்கள் சிவபெருமானிடம் செலுத்தும் அன்பு நேரே செல்லும் மெய்யன்பு ஆகாது; இது தாம் கருதும் பயன் வழியாகச் செல்லும் சார்புபற்றிய அன்பாகும். இச்சார்பு பற்றிய அன்பினால் வரும் சிவபுண்ணியம் பின்னர் மெய்யன்பையே விளைவிக்குமாதலால் அவை உபாயச் சிவபுண்ணியம்’ என்று கருத முடிகின்றது. தீக்கை பெற்றேனும் பெறாமலேனும் சிவபெருமானிடத்துக் கொண்ட அன்பே காரணமாக யாதொரு பயனையும் கருதாது செய்யும் சரியை முதலியவைகளே 'உண்மைச் சிவ புண்ணியங்கள் என்று கருதப் பெறு .கின்றன. - (4) வீடுபேற்றிற்கு வழி - ஞானம் சரியை முதலிய மூன்றும் ஞானத்தின் வளர்ச்சி நிலைகளாகும் என்பதை நாம் அறிவோம். இந்த ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல்' என்ற