பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 299 கொண்டு செல்லாது உண்மையான அறிவாகிய ஞானத்தில் திளைத்தவர்கள் உண்மையிலேயே சிறந்தவர்கள் என்பது தெளிவு. சித்தியார் கூறுவதும் இதற்கு அரணாக அமை கின்றது. சன்மார்க்கத்திற்கு (நன்னெறிக்கு) மணிவாசகப் பெருமானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். - “தத்துவம் (வடசொல்) என்பதற்கு மெய்ம்மை’ அல்லது உண்மை’ என்பது பொருள். எனவே தத்துவ ஆராய்ச்சி என்பது பொருள்களின் உண்மைநிலைகளை அளவை முறையால் ஆய்ந்துணர்வதாகும், மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவப் பெருந்தகையின் திரு வாக்கு. இதனால் ஒவ்வொரு சமயமும் தன்தன் கொள்கையே உண்மை என்பதைத் தத்துவநூல் வழியாக விளக்குகின்றது. சைவ சமயம் தனது கொள்கையை அவ்வாறு விளக்கும் பகுதியே சைவாகமங்களில் ஞானபாதம் எனப்படுவது. எல்லா வேதங்களும் பண்டைச் சாத்திரங்களும் ஞானத்தையே முத்திக்கு நேரான மார்க்கமாக ஒரேமாதிரியாகக் கருதுகின்றன. சித்தியாரும்’ இதனையே பேசுகின்றது. நான்கு வேதங்களும் புராணங்களும் புனித ஆகமங்களும் ஞானமே முத்திக்கு வழி என்று உறுதி கூறுகின்றன. பந்தம் அஞ்ஞானத் தில் கொண்டுவிடுகின்றது. உண்மையான மெய்யறிவு, மெய்ஞ் ஞானம் எழுந்தவுடன் பகலவனைக் கண்ட இருள்போல அஞ்ஞானம் அகன்று மறைகின்றது. அறியாமை அழிந்தவுடன் - பந்தம் போனவுடன் - விளைவது, முத்தியாகும். உண்மை யான இந்நிலையை அடைய உதவும் அறிவு பதிஞானம் ஆகும். 37. சித்தியார்-8.22 38. மேலது. 2.7