பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 30; இப்பருவத்தில் தானாக வந்து விடாது. ஆசிரியர் ஒருவர் பயிற்றுவித்தலால்தான் அக்குழவியிடம் கல்வி வருகின்றது. பிறவியிலேயே ஒருவனுக்குக் கண்ணில்லை. மணி மந்திர ஒளடதங்களால் அவனுக்குக் கண்கிடைக்கின்றது. பொருள்களைக் கானும் நிலை அவனுக்கு வந்து விடுகின்றது. ஆனால் அவனுக்குக் காணும் பொருள்களை இன்னவை என்று உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. பிறவியி லேயே கண்ணுடையவன் ஒருவன் பொருள்களை அவனுக்கு "இஃது இன்னது என்று அறிவித்தால்தான் அவனால் பொருள்களை இன்னின்னவை என்று பாகுபாடு செய்து அறிய முடிகின்றது. இவை போலவே ஆணவமலம் பரிபாகமாகிச் சத்தி நிபாதம் வருமாயின் தவம் புரியும் நிலை வாய்க்குமே யன்றித் தவமும் ஞானமும் கிடைத்து விட வாய்ப்பு இல்லை. குருவருளால்தான் அவை கிடைக்க வேண்டும். அதற்கு இறைவன் திருவருளும் வேண்டும். பொதுவாக தவம் கிரியை’ என்று சொல்லப் படும். சரியை முதலிய மூன்றையும் தருவோன் கிரியா குரு' என்றும், ஞானத்தை உணர்த்துவோன் ஞானகுரு' என்றும் வழங்கப் பெறுவர். மேன்மேல் நிலையில் உள்ளவர் கீழ்கீழ் நிலையைப் பிறருக்குத் தர வல்லவர் என்பதையும் கீழ்கீழ் நிலையில் உள்ளவர் மேல்மேல் நிலையைத் தரவல்லவராகார் என்பதையும் நாம் உணர்தல் வேண்டும் இக்காரணத்தால் ஞானகுரு ஞானம், யோகம், கிரியை, சரியை என்ற நான்கையும் தரவல்லவர்; யோககுரு யோகம், கிரியை, சரியை என்ற மூன்றையும் தரவல்லவர்; கிரியா குரு கிரியை, சரியை' என்ற இரண்டைமட்டிலும் தரவல்லவர். சரியைக்குரு சரியை' ஒன்றைமட்டிலுமே தர உரியவர். இங்ங்ணம் குருமார்களின் தாரதம்மியம் உள்ளது என்பதும் ஈண்டு அறியப்பெறும். இவற்றை சித்தியார் பாடலும்’ தெரிக்கின்றது. 39. சித்தியார் 12.5