பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் - 309 எனப்படும் திரு ஐந்தெழுத்தே முதன்மையானது. அதனால் அது மூலமந்திரம் என வழங்கப்பெறும்." அதற்கு அடுத்த நிலையில் உள்ளவை சம்மிதா மந்திரங்கள்; இவற்றுள் பதினொரு மந்திரங்கள் அடங்கும், அவற்றுள் ஐந்து பஞ்சபிரம்ம மந்திரம் என்றும் ஆறு வடிடங்க மந்திரம் என்றும் வழங்கப்பெறும். மற்றும் கலாமந்திரங்கள், காயத்திரிகள் முதலாய பல மந்திரங்களும் அவற்றுக்குரிய பீஜாக்கரங்களும் உள்ளன. பஞ்சாக்கரம் 'துரலபஞ்சாக்கரம்’ ‘சூக்கும பஞ்சாக்கரம் முத்தி பஞ்சாக்கரம் முதலியன வாகப் பிரித்துப் பேசப்பெறும். அவையும் அவ்வப் படிமுறைக் கேற்றவாறு உபதேசிக்கப்பெறும். அவற்றையும் ஞானத்திற்குச் சாதனமாய் உள்ள யோகம் முதலிய மூன்றின் இயல்புகளையும் குருமுகமாக அறிந்தும், சைவாகமங்கள் பத்ததிகள் முதலி யவை ஒதியும் உணர்ந்து கொள்ள வேண்டியவை. இங்ங்னம் இவற்றையெல்லாம் உணர்தற்கு முதற்படியாக நிற்பது சமயதீக்கை செய்யப்பெற்று மந்திராதிகாரத்தைப் பெறுதலாகும். இதன் பின்னரே மற்றவை யாவும் உண்டாகும். (ஊ) உபதேசிக்கும் முறை தீக்கை பெறுங்கால் மந்தி ரங்களை உபதேசிப்பதிலும் முறைகள் உள்ளன. மந்திரங்களை பீஜாக்கரத்தைக் கூட்டி உபதேசித்தலும், கூட்டாது உபதேசித்தலும் என் இரண்டு வகை உண்டு. பீஜாக்கரம் இன்றி உபதேசிக்கும் தீக்கை நீர்ப்பீஜதீக்கை ஆகும்; பீஜாக்கிரத்தோடு உபதேசிக்கும் தீக்கை சபீஜதீக்கை என்று வழங்கப்பெறும். அபிடேகத்தீக்கையில் சபீஜமேயன்றி, நிர்ப்பீஜம் இல்லை. ஏனைய சமய, விசேட நிர்வான தீக்கைகளே சபீஜம் என்றும் நிர்ப்பீஜம் என்றும் பிரிவுபடும். சாதிகார தீக்கை சபீஜமாகவும் நிரதிகாரதீக்கை நிர்ப்பீஜமாகவும் 43. வைணவத்தின் எட்டெழுத்து மந்திரமாகிய “ஓம் நமோ நாராய ணாய என்பதும் மூலமந்திரம் என்றே வழங்கப்பெறுகின்றது.