பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #2 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தனியாகவும், செய்யப்பெறும். இப்பொழுது இவை சாம்பவ தீக்கை, விஞ்ஞான தீக்கை என்ற திருநாமங்களைப் பெறும். ஒளத்திரிதீக்கை பெறாது அங்க தீக்கை மட்டுமே பெற்றவர் மந்திரங்களைச் சிவாகமும் திருமுறைகளும் ஆகிய நூல்கள் வழியாகவே ஓதுவதற்கு உரியவர் தனியாகக் கணித்தற்கு உரியரல்லர். கள், புலால் உண்டல்களைச் செய்வோர் சிவாகம திருமுறைகளைத் தவிர ஏனைய நூல்களையே ஒதுதற்கு உரியர். அவற்றில் வரும் திருவைந்தெழுத்து முதலிய ஏனைய எழுத்துகளோடும் சொற்களோடும் ஒப்பனவேயன்றி மந்திரங் களாகச் சிறந்து நில்லா என்பது அறியப்பெறும். (ஐ) நல்லாசிரியர் மூலம்: இவண்குறிப்பிட்ட நயனம் முதலிய ஆறாகிய சாம்பவதீக்கை, மற்றும் ஒளத்திரி தீக்கை ஆகிய அனைத்து தீக்கைகளும் நல்லாசிரியர் ஒருவரால் நன் மாணாக்கர்கட்குச் செய்யப் பெறுதல் வேண்டும். அப்பொழுது தான் நற்பயன் விளையும். பிறர் செய்தாலும் பெற்றாலும் அவை சடங்குமாதிரியாய்ப் போய்விடும். உண்மையான தீக்கைகள் ஆகா. இவற்றுள்ளும் சமயதீக்கையும் விசேட தீக்கையும் ஒருவாறு சடங்கு மாத்திரையாய்ச் செய்தலும் பெறுதலும் உண்டு. நிர்வாணதீக்கையும் அபிடேக தீக்கையும் உண்மையாகத்தான் செய்யப் பெறுதல் வேண்டும்; வெறும் சடங்குகட்கு இவண் இடமே இல்லை. மற்றெரு குறிப்பு: ஆசிரியத் தன்மையை வழங்கும் அபிடேகதீக்கை பெறுவதற்கு உரியவர் இல்லறத்தவரே என்று சிவாகமங்கள் கூறும்; துறவிகளாயின் இல்லறத்துக்குச் செல்லாமலே துறந்த விரதியரே உரியர் என்றும். அந்நூல். களில் விதிக்கப் பெற்றுள்ளது. இல்லறத்தினின்றும் துறந்தோர் மாணாக்கரை உடையராயின் அவர்தரும் பொருள் முதலிய வற்றால் மீளவும் சுற்றத்தொடர்பு உடையராய் விடுவர். இல்லறத்திற்குச் செல்லாமலே துறவுநிலை அடைந்தோர் அந்நிலையினின்றும் தாழாது நிற்றல் அரிது என்று கருதலாம்,