பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 32 3 இரும்பைக்காந் தம்வலித்தாற் போலியைந் தங்குயிரை எரிஇரும்பைச் செய்வதுபோல் இவனைத் தானாக்கி அரும்பித்திந் தனத்தைஅனல் அழிப்பதுபோல் மலத்தை அறுத்து,அமலன் அப்பணைந்த உப்பேபோல் அணைந்து விரும்பிப்பொன் னினைக்குளிகை ஒளிப்பதுபோல் அடக்கி - மேளித்துத் தான்எல்லாம் வேதிப்பா னாகிக் கரும்பைத்தே னைப்பாலைக் களியமுதைக் கண்டைக் கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே" என்ற திருப்பாடல்களால் முத்தியின் இயல்பைத் தெளியலாம். மெய்கண்டாரின் மாணவருள் மற்றொருவராகிய திருவதிகை மனவாசகம் கடந்தார். - * முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போதங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின்-ஒத்த இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர்என் றோதும் விதி. தத்துவங்க ளெல்லாம் சகசமாய் ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஒதியிடுந் தான். (சகசம்-கூடப்பிறந்தது) ஆதவன்றன் சந்நிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதமற நிற்கின்ற பெற்றிபோல்-நாதாந்தத்து அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்தின்பக் கண்ணில் அழுந்தியிடுங் காண். சென்றிவன்றான் ஒன்றின் சிவபூ ரணம்சிதையும் அன்றவன்றான் ஒன்றும்எனில் அன்னியமாம்-இன்றுஇரண்டும் அற்றநிலை ஏதென்னின், ஆதித்தன் அந்தன்விழிக் குற்றம் அற நின்றதுபோல் கொள்." 11. சித்தியார் 11.12 12. உண்மை விளக்கம்-50,46,47,48.