பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் 'காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்பன முறையே ஞாதுரு, ஞானம், ஞேயம்’ என்று வடமொழியில் கூறப்பெறும். அவற்றை இங்ங்னமே தமிழில் மொழி பெயர்த்துக்கூறினால் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்று சொல்லலாம். ஞேயப் பொருளாகிய சிவத்தை உணரும் நிலையை விடுத்து, 'யான் இதனை அறிகிறேன் என்று ஆன்மா தன்னையும் தனது ஞானத்தை யும் உணரும்படி செய்வது ஆணவ மலத்தின் வாசனையே என்பதை நாம் அறிவோம். பெத்த காலத்தில் பிறவாறு யான், எனது என்னும் செருக்கினைக் கொடுத்து நின்ற ஆணவ மலம், முத்திக் காலத்தில் வாசனை மாத்திரமாய் நின்று இவ்வாறு சிவத்தை மறந்து யான்' என்று தன்னையும், 'எனது' என்ற தன் ஞானத்தையும் உணரச் செய்யும். அதனால் அதுவும் அற்ற நிலையே முத்தி நிலையாகும். இந் நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டை என்று வழங்கப்பெறுகின்றது. இந்நிட்டை கைவரப் பெற்றோரே 'சீவன் முத்தர் என்றும் (சிவத்தை) அணைந்தோர் என்றும் சொல்லப் பெறுவர். இவண் கூறியவாறு ஆன்மா ஞாதுருவையும், ஞானத் தையும் அறியாது, ஞேயமாகிய சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்துவதாகிய நிட்டை நிலையையே மறவாநிலை’ என்று திருமுறைகள் கூறும். மறக்கு மாறில்லாத என்னை மையல்செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்.” என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கில் மறக்கு மாறில்லாத என்றது இந்நிலையையே யாகும். இம்மறவா 17. சம்பந்தர் தேவாரம் 2.98:5