பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் யின் இப்பிறவியிலேயே ஞானாசிரியரால் ஞானமே பெற்று வீடுபேறு அடைவர் அல்லது அடுத்த பிறவியில் சிறந்த மக்களாய்ப் பிறந்து அவ்வாறு வீடுபேறு அடைவர். இவ்வகை யில் மாயோன் கண்ணனாய்ப் பிறந்திருந்த காலத்தில்' உடமன்னிய முனிவரால் ஞானம் பெற்ற வரலாறு கூறப்பெறு கின்றது. இதனால் மாயோன் முதலிய சகலவருக்கத்தினர் வாழும் பதங்கள் எல்லாம் முத்தியுலகங்கள் அல்ல. எனினும், சகலருக்கு மேற்பட்ட பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்பவர் வாழும் உலகங்களே முத்தியுலகங்கள் ஆகும். ஏனெனில், பிரளயாகலர் முக்குணங்களில் நீங்கியவராதலாலும், விஞ்ஞான கலர் விருப்பு வெறுப்புகளில் நீங்கினவராதலாலும், அவர்கள் வாழும் உலகங்களில் அவை இல்லாமையால் என்க. இனி குணிருத்திரர் சகலவருக்கத்தினராயினும் சிவ புண்ணியத்தால் சிவனை உணர்ந்து அவனது உருவும், பெயரும், தொழிலும் பெற்றமையால் அவரது உலகங்களும் முத்தியுலகம் எனப்படும். - . பிரகிருதி வரையில் உள்ள தத்துவங்களில் உள்ள பதவிகட்கு மால், அயன், இந்திரன் முதலியோர் புண்ணிய மிகுதியால் தலைவர்களாயிருப்பர். பிரகிருதிக்கு மேற்ப்ட்ட தத்துவத்தில் உள்ள பதவிகட்கு சிவ புண்ணிய மேலீட்டால் பக்குவமுற்றுச் சிவானந்தத்தைப் பெற்ற சீகண்ட உருத்திரர், அனந்த தேவர், மந்திர மகேசுவரர், அணுசதாசிவர் என்போர் தலைவர்களாய்த் திகழ்வர். இவர்களுள் சீகண்ட உருத்திரர் ஒருவர் மாத்திரம் பிரளயாகலருள் பக்குவம் அடைந்து சிவஞானம் கைவரப் பெற்றவர்கள். இவர்கள் சிவானந்தத்தால் 24. திருமாலின் பிறப்பு (அவதாரங்கள்) வினைவயத்தால் ஆனவை அல்ல என்றும், அது விருப்பத்தால் ஆனது என்றும் வைணவம் கூறும். ஆனதுபற்றியே அவர் பிறப்பில் பல்பிறவிப் பெருமான் என்று போற்றப்பெறுவர்.