பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடு பேறு - 33 மலம் நீங்கப் பெற்றாலும், மலவாசனை நீங்கப் பெறாமையால் அதிகாரத்திலும் போகத்திலும் சிறிதே இச்சையுடையவ ராயிருப்பார். இதனால் இவர்கள் மேற்கூறிய தலைமையைப் பெற்று புவனபதிகளாய் விகாரணமாக இவரெல்லாம் தடத்த சிவனோடொத்து உருவும், பெயரும், தொழிலும் உடையவ ராயினும், ஆன்ம வருக்கத்துட் பட்டவர்களேயாவர். ஆன்ம வருக்கத்துட்பட்டவர்களாய் இந்நிலைகளைப் பெற்றவர்களே அனுபட்சத்தினர் என்று வழங்கப் பெறுதலையும், பரமசிவன் தடத்த நிலையில் கொள்ளும் சதாசிவன், மகேசுவரன், வித்தியேசுரன், உருத்திரன், மால், அயன் என்னும் நிலைகள் ‘சம்புபட்சம்’ என வழங்கப் பெறுதலையும் நாம் அறிவோம். அனுபட்சத்தினர் தம்தம் அதிகார எல்லைக்கு உட்பட்டு வாழும் ஆன்ம கோடிகட்குப் படைத்தல் முதலிய ஐந்தொழில் களையும் செய்வர். இவற்றுள் அருளலை ஆசான் மூர்த்தி யாய் உடனிருந்தே செய்வர். விரையத் தோன்றி மறையும் அருட்டிரு மேனியாலும் உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்துதலாலும் குறைவின்றி நிரம்பிய ஞானத்தை அருளு பவன் பரமசிவன் ஒருவனே என்பதை நாம் அறிவோம். இப்பரமசிவனோடு இரண்டறக் கலக்கும் நிலையான முத்தியே பரமுத்தி என்பதை முன்னர்க் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூரலாம். அஃதல்லாது அணு சதாசிவர், மந்திர மகேசுவரர், அனந்த தேவர் என்பவரது உலகங்களை அடைந்து நிற்றல் அடர முத்தியாம். இவரெல்லாம் சுத்த மாயையில் தோன்றிய சுத்த தத்துவ புவனங்களில் வாழ்பவர் என்று முன்னர்க் கூறப்பெற்றதை நினைவு கூரலாம். ஆகவே சுத்த தத்துவ புவனங்களே அபரமுத்தி தானங்கள் என்பது தெளிவாகும். (ஆ) பதமுத்தி வித்தியாதத்துவங்கள் ஏழிலும் உள்ள சீகண்ட புவனம் முதலிய உருத்திர உலகங்களை அடைதல்