பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு - - 335 (x) சாலோகம் முதலியவற்றின் பயன்கள். சிறப்பு உண்மைச் சரியையில் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் நிவர்த்தி கலையுட்பட்ட உருத்திர உலகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர் கிரியையிற் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் பிரதிட்டா கலையுட்பட்ட உருத்திர உலகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ்விரு உலகங்கட்கும் புவனபதிகட்கும் சீகண்ட உருத்திரர் முதல்வர் என்பதை நாம் அறிவோம். . யோகத்தில் சரியை முதலிய நான்கிலும் நின்றோர் வித்தியாகலையுட்பட்ட உருத்திர உலகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ்வுலகங்களுக்கும் புவனங் களுக்கும் முதல்வர் அனந்த தேவர் என்பதை நாம் அறி வோம். இனி, ஞானத்துள் கேட்டலின் விரியாகிய ஞானச்சரியை யிற் சரியை முதலியவற்றில் நின்றோர் நிவிர்த்தியும் பிரதிட்டை யுமாகிய கலைகட்குட்பட்ட அடரமுத்திதானமாகிய சிவலோகங் களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். சிந்தித்தல், தெளிதல் இவற்றின் விரியாகிய சரியை முதலியவற்றில் நின்றோர் முறையே வித்தை, சாந்தி என்னும் கலைகளுக்குட் பட்ட அபரமுத்தித்தானமாகிய சிவலோகங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். நிட்டையில் மீளாது நிற்க மாட்டாதோர் ஞானத்துள் ஞானமாகிய அதனிற் சரியை முதல் யோகம் ஈறாகிய நிலை யுடையராய் நிற்பராகலின், அவர் சாந்தியாதீத கலையுட்பட்ட புவனங்களில் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ் வலகங்கள் அனைத்திற்கும் தடத்த சிவனாகிய சிவபெரு மானே முதல்வனாதலை நாம் அறிவோம்.