பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (4) சீவன் முத்தி ஞானத்தின் ஞானமாகிய நிட்டையின் பயனாக அடையப்படும் பரமுத்தி - அதாவது சாயுச்சியம் என்னும் நிலையை - இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியிருக்கும் நிலையில் பெற்றிருத்தலே 'சீவன் முத்தி' என்பது. இஃது ஒர் அதீத நிலையாகும். இந்நிலையை அடைந்தோருக்கு சஞ்சிதம் (பழவினை) ஆகாமியம் (எதிர் வினை) என்னும் இருவகை வினைகளும் இல்லாது ஒழியும். சஞ்சித வினை நிருவான தீக்கையால் கெட்டொழியும், ஆகாமியம் இறை வனது அருள் ஒளியால் அழிந்து ஒழியும், ஆகவே, உள்ளது எடுத்த உடம்பு கொண்ட பிராரத்தம்(நுகர்வினை) ஒன்றே யாகும். இஃது உள்ள துணையும் இவர்கள் ஏனையோர் போல உண்டு உடுத்து பூசிமுடித்து நலந்தீங்குகளை எய்தி நிற்பினும் தாமரை இலைத் தண்ணீர் போலச் சிறிதும் பற்றின்றிச் சலியாது நிற்பர். பிராரத்தம் உள்ளவரை உடம்பு நீங்காது நிற்கும் என்பதை நாம் அறிவோம். ஆயினும், அஃது உடலளவாய் நின்று ஒழியுமேயன்றி, உயிரைத் தாக்கி உலகத்தோடு, தொடர்பு படுத்துதல் இல்லை. ஆகவே சீவன் முத்தியை அடைந்தோர் எஞ்ஞான்றும் இறைநினைவில் அழுந்தி, இறைவனோடு தொடர்பற்று நிற்றலின்றி, உலகத்தோடு தொடர்புற்று நிற்றல் இல்லை. இந்நிலைதான் நிட்டை நிலை’ என்றும் வழங்கப்பெறுகின்றது. இந்த நிட்டைநிலையில் இவர்களை ஞாயிறு எங்கு எழில் ஏன்?” “வானம் துலங்கில் என்? மண்கம்பம் 32. வைணவத்தில் போயபிழையும் (சஞ்சிதம்) புகுதருவான் நின்றனவும் (ஆகாமியம்) தீயினில் தூசாகும் சரணாகதி யால். ஆனால் பிராரத்தம் தொடர்ந்து இருக்கும் நிலை தாமரை இலைத் தண்ணீர்போல் சிறிதும் பற்றின்றி இருக்கும் நிலை. ஒப்புநோக்குக. 33. அப்.தே.6,953