பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள் 19 திருத்துறையூர் அருணந்திசிவாச்சாரியாரிடம் சென்று தம்குறையைத் தீர்க்கும் வழியைக் காட்டுமாறு வேண்டினார். அப்போது ஆசிரியர் திருமுறையைப் பூசித்துக் கயிறு சாத்திப் JITTEGGETTT. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே." என்ற திருப்பாட்டு கிடைத்தது. அப்பாடலுள் திருவெண்காட்டி லுள்ள முக்குளநீரில் நீராடுபவர்களுக்கு பிள்ளையினோடு எண்ணியவை யாவும் கைவரும் என்று அறுதியிட்டுக் கூறியிருத்தலின், ஆசிரியர் அச்சுதகளப்பாளரைத் திருவெண் காட்டிற்குச் சென்று முக்குளநீரில் மூழ்கி அங்குத் திருக்கோயி லில் எழுந்தருளியிருக்கும் பெருமானையும் அம்மையையும் வழிபட்டு வரும்படி பணித்தார். அச்சுத களப்பாளரும் ஆசிரியர் இட்ட கட்டளைப் படியே தம் துணைவியாருடன் திருவெண்காட்டையடைந்து முக்குள நீரில் மூழ்கி அறங்கள் பலவும் செய்து வந்தனர். ஓராண்டு உருண்டோடியது. ஒருநாள் அவருக்குக் கனவில் சிவபெருமான் தோன்றி அன்பனே, இப்பிறவியில் மகப்பேறு எய்தும் பான்மை நினக்கு இல்லை என்று உரைத்தனர். அது கேட்ட அச்சுதகளப்பாளர் ஞானசம்பந்தப் பெருமானது திருவருட்பாடலை நம்பி ஈண்டுத் தவங்கிடந்ததன் பெரும் 2. சம். தே. 2,48:2