பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு - 347 அறியும் பொதுமைபற்றியேயாகும் என்பது உளங்கொள்ளத் தக்கது. சைவசித்தாந்தம் கூறும் முறையில் பொருளியல்புகளை உணர்வதே உண்மை ஞானமாகும். அது பொருளின் எண்ணிக்கை வகையால் மூன்று என்றும், அவற்றின் இயல்பு வகையால் தடத்தம் சொரூபம்’ என இரண்டு என்றும், அவற்றினிடையேயுள்ள தொடர்பு சுத்தாத்துவிதம்’ என்றும், நிலைவேறுபாடுகள் பெத்தம், முத்தி’ என இருதிறப்பட்டுப் பிறிதொரு வகையால் கேவலம், சகலம், சுத்தம்’ என மூன்றாகி, ஒவ்வொன்றிலும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்' என ஐந்தாய் மூவைந்து பதினைந்தாய் விரியும் என்றும் கூறும். இங்ங்னம் அவற்றை உணரும் ஞானமே சித்தாந்த ஞானம் ஆகும். இந்த ஞானமே கேட்டல் முதலிய நான்காகுமிடத்துப் பத்தாகி விரியும். இவை தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவபோகம்’ என்பனவாகும். இவண் குறிப்பிட்ட பத்தும் உடற்செய்கைகள் அன்று: அறிவுச் செய்கையாகிய ஞானச்செய்திகளேயாகும். ஆதலின் இவை அறிவின்கண் நிகழும் நிலை வேறுபாடுகளேயாகும். இந்நிலைகளுள் தத்துவம், ஆன்மா, சிவம் என்ற மூன்று பொருள்களும் பாசம், பசு, பதி எனப்படுவதை நாம் அறிவோம். ஆணவம், மாயை, கன்மம் என்ற மூவகைப் பாசங்களுள் மாயையின் காரியமாகிய தத்துவம் ஒன்றே ஈண்டுக் கூறப்பெறுகின்றது. இதனை 'உலகம் என்று பொதுவாகக் கூறலாம். ஆயினும் உலகம் எனக் கூறினால் உடலையும், மனம் முதலிய பிற கருவிகளையும் அது தெளிவாக விளக்க மாட்டாதாதலின், உலகம்’ என்ற அளவில்