பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் என்ற படிநிலைகளும் அடங்கும். இந்த இரண்டு வகைப்படி நிலைகளையும் உற்றுநோக்கின், கேட்டல் முதலிய நான்குமே தத்துவ ரூபம் முதலாகக் கூறப்பெற்ற பத்தாகக் காணப் பெறுகின்றன என்று தெளிவாகும். துகளறு போதம் முதலிய சில நூல்களில் இவை முப்பது என்று இன்னும் விரிவாக விளக்கப்பெறுகின்றன. தச காரியத்துள் ரூபம்’ என்பன மூன்றும் கேட்டலில் அடங்கும்; தரிசனம் என்பன மூன்றும் சிந்தித்தலில் அடங்கும். தத்துவ சுத்தி, ஆன்ம சுத்தி, சிவயோகம் என்னும் மூன்றும் தெளிதலில் அடங்கும்; சிவபோகம் நிட்டையில் அடங்கும். இவை தெளியப்படும். சிவப்பிரகாசம் என்னும் நூல் இவற்றை, வேறுவகையாகப் பிரித்துப் பேசும். இவையெல்லாம் வேறு வேறு போலும் என்று மயங்கி மலைய வேண்டா. ஆசாரியப் பெருமக்கள் அவரவர் மனம் அறிந்த அநுபவத்தை இவ்வாறு பல வகையாகக் கூறினாலும்’ அநுபவம் ஒன்றேயாதல் என்பது ஒர்ந்து தெளியப்படும். (6) அவத்தைகள் உயிர் மலங்களோடும் இறைவனோடும் கலந்திருக்கும் நிலைகளை அவத்தை (அவஸ்தை) என்று கூறுவர் வடமொழியாளர்கள். இந்த அவத்தைகளைப்பற்றி முன்னர் விளங்கப் பெற்றதை நினைவு கூர்ந்து இவண் கூறப்பெறுவதை உளங் கொள்ள வேண்டும். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்' ஆகிய ஐந்து அவத்தைகளும் 58. இத்தகைய ஆசாரியர்களின் அநுபவங்கள்தாம் வைணவத்தில் வடகலை, தென்கலை என்ற இருவேறுபட்ட கூட்டங்களாகப் பிரிய வழி வகுத்தன. - - 59. இவை அருந்தமிழில் முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று வழங்கப் பெறும்.