பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 355 பெத்தத்தில் கேவலம் சகலங்களில் நிகழும் என்பதை நாம் அறிவோம். அவை சுத்தத்திலும் நிகழும் என்பதை ஈண்டு விளக்குவோம். தத்துவமும் தாத்துவிகமும் ஆகிய கருவிகள் கூடுதல் பிரிதல்களாற்றான் சாக்கிரம் முதலிய வேறுபாடுகள் நிகழ்கின் றன; இவை இங்ங்ணம் கூடியும் பிரிந்தும் வருமிடத்துப் பிரிந்து நிற்கின்ற நிலையில் உயிருக்கு அறியாமை மேலிடுகின்றது. அப்போது உயிர் அதன்கண் அழுந்துகின்றது. இதுவே ஐந்தவத்தை என்பதை நாம் அறிவோம். இங்ங்ணம் கருவிகள் குறையக் குறைய அறியாமையாதல், புலனுணர்வாதல் இல்லை. சிவாநுபவம் உளவாதலே சுத்த ஐந்தவத்தைகளாகும். ஆகவே, இவையும் மேற்குறிப்பிட்ட தசகாரிய நிலைகளிலும் அமைவனவாகும். இவை அமையும் முறையை ஈண்டு விளக்குவோம். - சிவத்துவ அநுபவம், தத்துவரூபம் முதலிய நான்கினும் சிறிதுமின்றி ஆன்மதரிசனத்துக்கண் சிவரூபம் வாயிலாகச் சிறிதே தோன்றி முதிருமாகலின், ஆன்ம தரிசனம், சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் இவை முறையே சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் என்னும் நிலைகளாகும். ஆன்ம சுத்தி, சிவ தரிசனம், சிவயோகங்களுள் பகுதிப்பட்டு அடங்கும். எனவே, தசகாரியங்களுள் முதல் ஐந்தும் சுத்த சாக்கிரம் என ஒருவாற்றாற் கூறப்பெறும் என்பதை உணர்தல் வேண்டும். மேலும் சில செய்திகள் ஈண்டு விளக்கப் பெறும். யோகாவத்தை யோகநிலைக்கண் இயமம் முதலாகக் கூறப்பெறும் எட்டுறுப்புகளுள் இயமம், நியமம், ஆசனம் என்னும் மூன்றும் யோகத்திற்குச் சிறப்புறுப்பாகாது பொதுப்பட நிற்கும்; பிராணாயாமம் முதலிய ஐந்துமே அதற்குச்