பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் சிறப்புறுப்பாய் நிற்கும். எனவே, பிராணயாமம், பிரத்தி யாகாரம், தாரணை, நியானம், சமாதி என்பன யோகத்தில் சாக்கிரம் முதலிய யோகாவத்தைகள் என்று வழங்கப்பெறும். இவற்றையே சிலர் சுத்தாவத்தைகள்’ என மயங்குவர். ஞானமின்றி உயிர்க்குச் சுத்தம் கூடாமையின் இவற்றைச் ‘சுத்தாவத்தைகள்’ எனக் கொள்ளுதல் பொருந்துமாறில்லை. இயமம் முதலிய மூன்றும் பிராணாயாமத்தின் உறுப்புகளாகக் கொள்ளப்படுதலின் அவற்றையும் பிராணாயாமத்துடன் கூட்டி யோக சாக்கிரம்’ என வழங்குவர். அவத்தைகளின் தன்மைகள்: இவற்றை ஈண்டு விளக்குவது பொருத்தமாகின்றது." கேவல ஐந்தவத்தைகளி லும், சகல ஐந்தவத்தைகளிலும், தத்துவ, தாத்துவிகங்களாகிய சில குறைந்தும் கூடியும் நிற்கும். யோகாவத்தையிலும் சுத்தாவத்தையிலும் எல்லாக் கருவிகளும் இருப்பினும் ஆன்மா அவற்றை முறையே அந்தக்கரணங்கள் வழியாகவும், தனது போகத்தின் வழியாகவும், நேரேவிடுதலும் பற்றுதலும் உடையதாயிருக்கும் என்பது அறியப்படும். - கேவல ஐந்தவத்தைகளில் குறைந்தும் கூடியும் வரும் கருவிகள் முப்பத்தைந்து. அவை ஞானேந்திரியம் ஐந்து கன்மேந்திரியம் ஐந்து; அந்தக்கரணம் நான்கு புருடன் ஒன்று: ஆகத் தத்துவம் பதினைந்து, ஞானேந்திரிய விடயங்கள் (புலன்கள் ஆகிய சத்தம் முதலிய ஐந்து, கன்மேந்திரிய விடயங்களாகிய வசனம் முதலிய ஐந்து; பிராணன் முதலிய வாயுக்கள் பத்து ஆகத் தாத்துவிகங்கள் இருபதும் ஆகும் என்ற விவரங்கள் ஈண்டு அறியப்படும். கேவல சாக்கிரத்தில் இக்கருவிகள் யாவும் மெதுவாக இயங்குமேயன்றி ஒன்றேனும் இல்லாமல் நீங்காது. கேவல .ை சித்தியார்4 (240 கண்டுதெளியலாம்.