பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு . 359 கண்ணே அழுந்தி மீளாது நிற்போரும், பண்டைப் பயிற்சி வயத்தால் மீள்வோரும் என இருதிறத்தினர் ஆவர். இவ்வாறு மீள்வோர் முன்போலக் கீழ் நிலையை எய்திப் பந்தத்தில் வீழ்ந்து கெடாது, மேல் ஏறி நிட்டையின்கண் அழுந்துதற் பொருட்டுத் துரிய நிலையிலே நின்று முத்தி பஞ்சாக்கரத்தை முறைப்படி சுத்தமானதாகக் கணித்தலும், தம்மைப்போல துரிய நிலை எய்திய அன்பரோடன்றிப் பிறரோடு கூடாது குருலிங்க சங்கமங்களைச் சிவனாகவே அறிந்து வழிபட்டு, உலகரோடு ஒட்டி வாழ்ந்தும் தாமரை இலையிற் தண்ணீர் போலப் பற்றின்றிச் சிவனோடு ஏகராகி அவனருள் வழியன்றி ஒன்றும் செய்யாராய்த் தற்போதத்தை தவிர்த்து நிற்பர். இவர்க்கு அவர் பெற்ற சிற்றின்பம், பேரின்பமாகவே விளையும். இதனால் அவர்க்கு ஆகாமியமும் அதுவழியாக வரும் பிறப்பும், இல்லை. இந்நிலையே உபாயநிட்டை” என்றும் சாக்கிரத்தில் அதீதத்தைப்புரிதல்’ என்றும் வழங்கப்பெறும். - . நிட்டையாகிய அதீதநிலையினின்றும் மீளும் தன்மை இல்லாத பெருமக்களையும் உலகத்தை உய்வித்தற் பொருட்டு இறைவன் இத்துரியநிலைக்கண் மீள்வித்தல் உண்டு என்பதற் குச் சில அருட்டிருமொழிகள் சான்றுகளாக அமைகின்றன. திருந்தடி மறக்குமா றிலாத என்னை மையல் செய்துஇம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினரய்." என்று வரும் சம்பந்தப் பெருமானின் திருமொழியையும், நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே 61. சம்பந்தர். தே. 2.98.5