பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ." என்ற அப்பர் பெருமானின் அருள் மொழியையும், நீக்கி முன்னனைத் தன்னோடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்தும்' என்ற மணிவாசகப்பெருமானின் மணிமொழியையும், மாதவம் செய்து தென்திசை வாழ்த்தித் தீதிலாத்திருத் தொண்டத் தொகைதரப் போதுவார் அவர் மேல்மனம் போக்கி" என்ற சேக்கிழார் பெருமானின் அருள் மொழியையும் கண்டு மகிழலாம். இவ்வாறு தன்னால் செலுத்தப்பெற்ற தன் அன்பரைக் கொண்டே இறைவன் தான் உலகிற்கு உணர்த்தி யருள்வன். இதற்குத் திருக்களிற்றுப்படியார், துரியங் கடந்தகடர்த் தோகையுடன் என்றும் புரியாது நிற்கின்ற பெம்மான்-துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன்.” என்று கூறி இதற்கு எடுத்துக்காட்டாகச் சமயகுரவர் நால்வரையும் காட்டியுள்ளது. இதனால் நால்வர் பெருமக்களும் இறைவன் திருவுள்ளப்பாங்கினால் இத்துரியநிலைக்கண் நின்றவர் என்பது தெளிவாகும். இனி, இங்ங்ணம் நிட்டைநிலையிற் சென்று மீண்டு இத்துரியநிலைக்கண் நிற்போரது சுத்தான்ம சைத்தன்யத்தையே இறைவன் தானாகக்கொண்டு வேறற நின்று பக்குவர்க்கு 62. அப்பர். தே. 4.13:9 63. திருவா. அதிசயப்பத்து.8 64. பெ.பு. திருமலைச்சருக்கம்:25. 65. களிறு-9