பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ...} மேற்கூரிய முறைதான் சரியை முதலிய சாதனங்களில் நிற்பவர்கட்கும் ஞானத்தைப் பெற்றவர்கட்கும் இடையே உள்ளது. சாதனங்களில் நிற்போர் ஞானத்தைப் பெறவேண்டிக் குருலிங்க சங்கம வழிபாட்டை மேற்கொள்ளுகின்றனர்; ஞானத்தைப் பெற்றவர்கள் அது நீங்காது நிலைத்து நிற்றல் வேண்டி இவ்வழிபாட்டை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறா யினும் வறியரது உழைப்பிற்கும் செல்வரது உழைப்பிற்கும் வேறுபாடு பெரிதாய் இருப்பதுபோல் சாதனத்தில் நிற்போரது வழிபாட்டிற்கும் சாத்தியமாகிய ஞானத்தை அடைந்தோரது வழிபாட்டிற்கும் வேறுபாடு பெரிது என்பது அறியப்படும். இனி, இந்த வேறுபாடுகளை விளக்க முயல்வோம். முதலாவது வேறுபாடு அஞ்செழுத்தின் வகைகளாகிய துலம், சூக்குமம், காரணம் முதலியவை. இவற்றை உபதேசம் பெறும் ஆசாரியனிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இவற்றிற்கேற்பப் பாவனை எனப்படும் கருத்து வகைகளும் வேறு வேறாகும். அவற்றை ஈண்டு தெரிவிப்போம். (i) சரியையில் நிற்போர் குருலிங்கங்களாகிய திரு மேனிகளையும், சங்கமங்களில் திருநீறு கண்டிகை, முதலிய திருக்கோலங்களையுமே சிவன்’ எனக் கண்டு வழிபடுவர். அவர்கட்குச் சிவபெருமான் எக்காலத்தும் வெளிப்படாது அங்கு மறைந்து நின்றே அருள் புரிவான். (ii) கிரியையில் நிற்போர் மேற்கூறிய இடங்களில் அவ்வவற்றைத் தாம் போற்றும் மறைமொழிகளாலும், அம்மறை மொழிக்கேற்பத் தாம் எண்ணும் எண்ணத்தாலும் செய்கைகளாலுமே அங்குச் சிவவிளக்கம் உண்டாவதாகக் கொண்டு வழிபடுவர். இவர்கட்குச் சிவபெருமான் விறகைக் கடையும் போது நெருப்பு தோன்றுதல்போல் அவ்வழிபாட்டில் தோன்றி அருள்புரிவான்.