பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள் - 21 வளர்த்து வந்தனர். அங்ங்னம் வளர்ந்து வரும் நாளில் சுவேத வனப்பெருமாள் முற்பிறவியிலேயே சரியை, கிரியை, யோகம் முதலியன முடித்துச் சிவஞானம் அடைதற்குரிய பெருந்தவத் தினராதலின் இரண்டு அகவையிலேயே அடிசேர் ஞானம் அடைதற்குரிய சாமு சித்தி நிலையை எய்தினார். முற்பிறவி யில் உறுதியாகப் பயின்ற கல்வி இப்பிறவியில் இளமையில் எளிதாகத் தழைத்தோங்கி ஒளிர்வதை இயற்கையிலேயே கணித நூல் உண்மை பெரிதும் படைத்திலங்கும் சில பிள்ளை களிடம் கண்கூடாகக் காண்கின்றோம். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து குறள் - 398) என்ற திருவள்ளுவர். திருவாக்கையும் ஈண்டு நினைத்தல் தகும். - சைவ சமயத்திற்கு முதல் தலைவராகிய திருஞான சம்பந்தரும், சித்தாந்த ஞான பரம்பரைக்கு முதல் தலைவராகிய மெய்கண்ட தேவரும் உலகம் உய்யவே தோன்றியருளினார் என்பது, அவர்கள் குழவிப் பருவத்திலேயே உலக நெறி செல்லாது கடவுளது.அருள் ஞான நெறியிலேயே நிற்கும் உயர் நிலை எய்தினமையால் தெளிவாகும். . சுவேதவனப்பெருமாள் திருவெண்ணெய் நல்லூரில் இருந்த பொழுது சனற்குமார முனிவரது ஞானப் புதல்வராகிய சத்திய ஞான தரிசனிகளிடம் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் என்பார் ஆகமத் தலைவராகிய ஜம்முனிவருள் தலை சிறந்த அகத்திய முனிவர் வீற்றிருக்கும் பொதிய வைண்வத்தில் இராமாநுசர் அவதரித்ததும் அவர் தாய் மாமன் திருமலை நம்பி தம் தங்கை மகன் இலக்குமண னைப் போல் சேவை, புரிய வேண்டும் என்று கருதி 'இளை யாழ்வார் என்று திருநாமம் சூட்டியதை நினைவுகூரலாம்.