பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 369 வருவது. அஃது இறை நாட்டத்தால் ஏற்படுவது. உணர்ச்சியின் வேகத்திற்கு ஏற்ப விழிநீர்ப் பெருக்கு மிகுதியாவதுண்டு. கடவுளுக்காக என்று கண்ணிர் உகுப்பாரைக் காண்பது அரிதினும் அரிது. பாராட்டத்தக்க அத்தகைய இன்பக் கண்ணீரை விழிநீர் ஆறு ஆக என்று குறிப்பிடுவர் அடிக்Tெ. பல்வேறு கடல்கள் உள்ளன. பரந்த நீர்நிலைகள் கடல் கள் என்ற பெயர் பெறுகின்றன. இலட்சியார்த்தக் கடல்களாகப் பல உள்ளன. பிறவிப் பெருங்கடல், ஆசைப் பெருங்கடல் என்பவை போன்றவை அவை. கடவுள்மீது வைத்துள்ள ஆசை மனிதனைப் படிப்படியாக மேல் நிலையை எய்துவிக் கின்றது. ஆசையின் வேகம் அதிகரித்தால் அஃது ஆவேசம் என்று பொருள் படுகின்றது. கடவுள் நாட்டத்தில் செல்லுகின்ற மனிதனுக்கும் அத்தகைய ஆவேசம் வந்து விடுகின்றது. கடவுளை நாடுவதும் முக்தியை நாடுவதும் ஒன்றே. ஏனைய ஆசைகள் சிறிய இன்பங்களை நல்க இறைவன் நாட்டம் தெவிட்டிப் போகாத பேரானந்தத்தையும் பேரன்பையும் உண்டு பண்ணுகின்றது. அத்தகைய தெவிட்டாத நிலை ஆனந்தநிலை யாகும். இக்கருத்துகளையெல்லாம் தொகுத்து ஆராத முக்தியினது ஆவேச ஆசைக்கடற்குள் மூழ்கி’ என்று விளம்புகின்றார் அடிகள். கடவுளும் கடவுளுடைய பெயரும் இணைபிரியா தவை. சில சமயம் கடவுளைவிட, கடவுளுடைய பெயருக்கு மகிமை அதிகமாகின்றது. நாம் ஒருவருக்கு வைக்கும் பெயர் பொருத்தமில்லாது அமைந்துவிடும். இயற்கையில் ஒவ்வொரு பொருளும் ஒரு சப்த சொரூபமாக உள்ளது. அது நமக்குப் புலப்படுவதில்லை. ஆன்றோர் அதனை அறிந்து கொள்கின் றனர். இறைவனிடத்து இருந்து வரும் ஓசையை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். பின்னர் அதனை அவர்களே