பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் எடுத்தோதுகின்றனர். இந்த ஒசைகளே சிவன், சங்கரன், நாராயணன், முருகன் என்பன போன்ற பல திருநாமங்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் அந்த ஓசைக்கு அடிப்படையாகவுள்ள பற்றற்ற வனாகிய மூலப்பொருளை அறிந்துகொள்ளவல்லவரா கின்றோம். கோவிந்தா என்று பெயர் திரெளபதியின் புடவை கரக்கக் காரணமாக அமைந்தது என்பதை ஈண்டு நினைத்தல் தகும். 'சங்கரன்' என்பது அவனுக்கு அமைந்த பொருள் களுள் ஒன்று. நலத்தைச் செய்பவன் என்பது அதன் பொருள். இதனைத் திரும்பத்திரும்ப உச்சரித்தால் நலத்தைச் செய்யும் பாங்கு நமக்கே வந்து விடுகின்றது ‘சுயம்பு’ என்பது அவனுக்கு அமைந்துள்ள மற்றொரு பெயர் தானாகத் தோன்றியவன் என்பது அதன் பொருள், கடவுள் எல்லா உயிர்கட்கும் சுகம் அளிப்பவர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டது சம்பு என்ற சொல். இறைவனுக்கு அமைந்துள்ள பெயர்கள் யாவும் அவனுடைய மகிமைகளை விளக்குவதற் கென்றே அமைந்தவை. அத்தகைய பெயர்களைக்கொண்டு அவனை அழைக்கின்ற பொழுதெல்லாம் அவனுடைய மகிமைகளையே நமது மனத்தகத்து அமைத்துக் கொள்ளு கின்றோம். மனத்தகத்து அழுக்கில்லாத மவுனமோன ஞானிகள் இல்வாறு தான் அமைத்துக் கொண்டிருந்தனர். இக்கோட்பாட்டையே தாயுமானவர் சங்கர சுயம்புவே சம்புலே என இயம்புகின்றார். - - இறைவனைக் கூவியழைக்கின்ற பாங்கிலும் பல நிலைகள் உண்டு. இயந்திரம்போல் ஒதினாலும் சிறுபயன் உண்டு. உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஒதினால் பெரும் பயன் உண்டு. உணர்ச்சியைப் பன்மடங்கு வலிவுடைய