பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தும் இதுவேயாகும். தாயுமான அடிகள் இதனையே சன் மார்க்க நெறி' என்று சாற்றுவர். இனி அவர் கூறுவனவற்றைச் சேர்த்து நோக்குவோம். "அங்கையொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினால் உருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவும்மொழி தழுதழுத் திடவணங்கும் சன்மார்க்க நெறி' என்று அடிகளார் கூறும் இந்நெறியே இறைவனை வணங்கும் நெறி. இந்நெறியில் நிற்பவர்கள் ஆலயவழிபாடு, பூசைமுறை கள், பூசைவிதிமுறைகள் இவற்றை அறிந்து கொண்டு அவற்றின்படி ஒழுக வேண்டும். (2) ஆலயவழிபாடு அழகு ஒரு தத்துவம். எங்கெங்கெல்லாம் அழகு பொலிகின்றதோ அங்கங்கெல்லாம் இறைவன் உள்ளான். இயற்கை முழுவதிலும் அமைந்துள்ள அழகு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக உள்ளது. மனத்தில் மேலான எண்ணத்தை எழுப்புவதற்கு இத்தகைய அழகு பயன்படு கின்றது. உயர்ந்த எண்ணங்கள் மனத்தில் உதிப்பதற்கும் அவற்றைச் சிந்திப்பதற்கும் அழகிய இடங்கள் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. ஓர் இடத்தில் உதித்த உயர்ந்த எண்ணம் பிறகு அந்த இடத்திற்கே புதிய அருள் சக்தியை நல்குகின்றது. உயர்ந்த எண்ணம் அழிவற்றது என்பதும் ஆன்றோர்கள் துணிபு. அவர்கள் எண்ணிய உயர்ந்த 3. தா. பா. சின்மயானந்த குரு -1