பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 373 எண்ணங்களும் இயற்கையின் பொலிவும் ஒன்று சேர்ந்து ஓர் இடத்தைப் புண்ணியத் தலமாக்குகின்றன. புண்ணியத் தலத்திற்கு மூலமகிமை இங்ங்னம் அமைகின்றது. தவசிகளும் முனிவர்களும் பல காலங்களில் பல இடங் களில் வசித்து வந்துள்ளனர் என்பது வரலாறு. அன்னவர்களின் சிந்தனையில் உயர்ந்த எண்ணங்கள் ஓயாது உதித்து வந்தன. இந்த எண்ணங்களின் வலிவால் அவர்கள் உதித்த இடங்கள் புண்ணியத் திருக்கோயில்களாகி விட்டன. உயர்ந்த கருத்து களைத் தம் மனத்திலே வளர்க்க முயலுகின்றவர்கள் இப்புண்ணியத் தலங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்மசாதனத்தில் மேனிலைக்குப் போகமுயல்பவர்கட்கு இத்தலங்கள் முற்றிலும் அனுகூலமான சூழ்நிலையாக அமை கின்றன. சாதகர்கள் எண்ணும் மேலான எண்ணங்கட்குத் தலங்கள் என்னும் சூழ்நிலைகள் மேலும் துணைபுரிகின்றன. இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே நம் நாட்டில் புண்ணியத் திருக்கோயில்கள் பல தோன்றியுள்ளன. நாயன்மார்கள் பாடல்பெற்ற தலங்கட்கும் ஆழ்வார்களின் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்ற தலங்கட்கும் என்றென் றும் மறையாத பெருமையும் மகிமையும் வந்தமைகின்றன. பண்டையநிலை வேதகாலத்தில் திருக்கோயில்கள் இருந்ததில்லை. சங்க காலத்திலும் அவை இருந்ததில்லை. இயற்கையின் சூழ்நிலையே வழிபாட்டிற்குரிய இடங்களாயின, வேள்வித் தீயின் மூலம் வழிபாடு பெரிதும் இருந்துவந்தது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயரே சங்ககாலத்திலும் இவ்வழக்கு நிலை பெற்றிருந்தது என்பதற்குச் சான்றாக அமைகின்றது. சங்ககாலத்தில் நதிக்கரையிலும் மரச்சோலைகளிலும் தெய்வ வழிபாடு நிகழ்ந்து வந்தது. பண்டைய இலக்கியமாகிய பரிபாடலில், -