பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆலமும் கடம்பும், நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயும் நீயே." என்பதில் திருமால் ஆலம், கடம்பு ஆற்றிடைக் குறை" குன்றம் முதலிய இடங்களில் வேறு வேறு பெயரையுடை யவராக எழுந்தருளியிருப்பதாகக் கூறப்பெற்றிருத்தல் இக் கருத்திற்கு அரணாக அமைகின்றது, நாளடைவில் இத்தகைய விருட்சங்கள் தல விருட்சங்களாயின என்பது அறியத்தக்கது. இடைக்கால நிலை: நம் நாட்டிலுள்ள பெரிய கோயில் கள் யாவும் இடைக்காலத்தில் ஏற்பட்டவை. இவை ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பெற்றவை. மலையைக் குடைந்தும் ஆலயங்கள் அமைந்தன. இவை குடைவரைக்கோயில்’ என்ற பெயரால் வழங்கின. இங்ங்னம் அமைந்த கோயில்கள் மானுடசரீரம் என்னும் ஆலயத்தின் புறச் சின்னமாகும். மானுட சரீரமே ஆலயங்களுள் மிகச் சிறந்தது என்பதை எல்லாக் காலத்திலும் ஆன்றோர்களால் ஆங்கீகரிக்கப் பெற்றுள்ளது. அண்டமெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' குடிகொண்டிருக்கும் தெய்வம் சிறப்பாக மானுட உடலில் வீற்றிருக்கின்றது என்பது ஆற்றோர் வகுத்த கோட்பாடு. உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே." 4. பரிபாடல்-41 அடி. 67-70 5. இதற்கு எடுத்துக்காட்டு கோயில் எனப்படும் திருவரங்கம். ன்னர்தான் கோயில் அமைந்திருக்க வேண்டும். 6. திருமந்திரம்-மூன்றாம் தந்திரம் காயசித்தி உபாயம்-2