பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சைவசித்தாந்தம் ஒன அறிமுகம மலையை நோக்கிச் செல்லும் காலத்தில் அவரது ஒளி விமானம் திருவெண்ணெய் நல்லூருக்கு நேராக வந்தவுடன் 'நின்றுவிட்டது. அதன் குறிப்பையுணர்ந்த பரஞ்சோதியார் சுவேதவனப்பெருமாளைக் கண்டு அவருக்கு மெய்யுணர் வளித்து மெய்கண்டார் என்ற தமது ஞானத் தந்தையின் திருநாமத்தைச் சூட்டியருளினார். சிவபெருமான் தக்க பக்குவமடைந்தார்க்குக் குருவாய் வந்துணர்த்துவது பெரும்பான்மையும் தமது பேரன்பை நிலைக்களமாகக் கொண்டேயாகும். பரஞ்சோதி முனிவர் மெய்கண்ட தேவர்க்கு மெய்யுணர்வு அளித்த காலை அவர் கடவுளோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையினின்று அருள் செய்தாராகலின் சிவபெருமானே நமது மெய்கண்டாருக்கு உண்மைப் பொருள் உணர்த்தியதாகக் கொள்ள வேண்டுமே யொழிய பரஞ்சோதி முனிவர் தாமே அவ்வாறு உணர்த்தினர் என்று கொள்ளுதல் பொருந்துவதன்று. இவ்வாறே உப மன்னியர் கண்ணனுக்கு உபதேசம் செய்ததாகவும், கண்ணன் பார்த்தனுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறுவதுண்டு. மெய்கண்டார் கலைஞானம் அனைத்தையும் திருவெண் ணெய் நல்லூரில் எழுந்தருளிய பொல்லாப் பிள்ளையாரிடம் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தனர். பின்பு அவர் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டுமென திருவுள்ளக் கருத்தால் சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த தலைமணி ஞான நூலினை இயற்றியருளினார். அச்சிவஞான போத நுண்பொருளை அவர்பால் கேட்டுத் தெளிந்தோர் நாற்பத்தொன்பது மாணவர்களாவர். மெய்கண்டாரது சந்தானமே. 'திருக்கயிலாய பரம்பரை' என்று வழங்கப் பெறுகின்றது. T நம்பியாண்டார் நமயி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரி டம் கேட்டுத் தெளிந்தனர் என்பதனோடு ஒப்பு நோக்கலாம்.