பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 375 என்ற திருமூலரின் திருவாக்கும் இதற்குச் சான்றாக அமை கின்றது. இவரே உடம்பை வளர்ப்பது உயிர்வளர்ப்பதற்கு ஒப்பாகும் என்றும் மொழிந்துள்ளார்.' - இவண் குறிப்பிட்டுள்ள தத்துவக்கருத்தினை பாமர மக்கள் அறிந்து கொள்ள முடியாது. இவர்கள் அறிந்து கொள்வதன்பொருட்டே திருக்கோயில்கள் அமைக்கப் பெற்றுள்ளன. ஆகமங்களில் விதித்துள்ளபடியே அவை அமைக்கப் பெற்றுள்ளன. ஆலயம் ஒன்று உடல் என்னும், ஆலயத்தின் புறச்சின்னமாகும். மூலஅமைப்பாகிய உடலி லுள்ள தத்துவங்களுக்கு அஃது ஒத்திருக்குமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இந்த ஆலயங்கள் மூலம் நம் உடல் அமைப் பிலுள்ள மகிமைகளை மேலும் தெளிவாக அமைத்து கொள் ளலாம். தேசப்படத்தைக் கொண்டு தேசத்தை நன்கு அறிந்து கொள்வதுபோலவே திருக்கோயிலின் துணைகொண்டு நமக்கு இயல்பாக அமைந்துள்ள உடல் என்னும் ஆலயத்தின் தத்துவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த அமைப்பிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் அறிவிற்கு ஏற்ப நம் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாம். திருக்கோயிலின் அமைப்பு: பெரிய சுற்று (பிராகாரம்) ஒன்று எடுத்து அதற்கு வாயில் ஒன்று அமைக்கப்பெறுகின்றது. அந்த வாயிலுக்கு மேலே உயர்ந்த கோபுரம் ஒன்று அமை கின்றது. அஃது உள்ளிருக்கும் கோபுரங்களைவிட உயர்ந்த தாக இருப்பதால் அஃது இராசகோபுரம் என வழங்கப் பெறுகின்றது. நெடுந்தொலைவிலிருந்தும் இதனைக் காணலாம். சில திருக்கோயில்களில் (எ-டு. மதுரை சொக்கலிங்கம்மீனாட்சி திருக்கோயில்) நான்கு திக்கிலும் நான்கு வாயில்கள் அமைத்து நான்கு இராசகோபுரங்கள் எழுப்பப் பெற்றுள்ளன. 7. திருமந்திரம் மூன்றாம் தந்திரம் காயசித்தி உபாயம் -1