பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 379 கும் இறைவன் தன் வலப்புறம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுகின்றான் பக்தன். இதுவே வலம் வருதல் என்பதன் பொருள். இது பிராணாயாமத்தின் சின்னமுமாகும். ஒழுங்கு பட்ட மேலான மனம் பிராணாயாமத்திற்குத் தகுதியுடையதா கின்றது. மனத்தகத்து உண்டாகும் மாறுதலுக்கு ஏற்ப சுவாசிக் கின்ற காற்றில் வேறுபாடு உண்டாகின்றது. கீழான மனப் பான்மையுடையவர்க்கு சுவாசத்தின் போக்குவரவு அல்லது பிராணாயாமம் முறையாக நிகழ்கின்றது. தங்கு தடையின்றி அமைதியாக வலம் வரும்போது பிராணாயாமமும் ஒழுங்காக நிகழ்ந்து விடுகின்றது. சூக்குமமாக உடலின்கண் நிகழும் நிகழ்ச்சி பிராணாயாமம் என்பதும், வலம் வருதல் என்னும் உடலின் தூலமான செயல் அதன் புறச்சின்னமாக அமை கின்றது என்பதும் தெரிந்து தெளியத் தக்கவை. நந்தி: கொடிமரத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது இறைவனது வாகனமாகிய நந்தியம்பெருமான். வாகனம் எதுவாயினும் அது சீவான்மாவைக் குறிக்கின்றது. மூலப் பொருளாகிய இறைவனை நோக்கியே இருக்குமாறு வாகனம் அமைந்திருக்கும். பதியை அடையவேண்டியது பசுவின் குறிக்கோள். பதியைச் சென்றடைவதற்கு எல்லாக் காலத்திலும் மனம் இறைவன் நாட்டத்திலேயே இருத்தல் வேண்டும் என்னும் கோட்பாட்டை வாகனம் விளக்கிக் கொண்டுள்ளது. திருச்சுற்றில் நடந்து வரும் பக்தன் திருக்கோவிலினுள்ளிருக் கும் இறைவனையும் அவனைப் பார்த்தவண்ணம் இருக்கும் வாகனத்தையும் சேர்த்துவைத்தே பக்தன் வலம் வருகின்றான். குறுக்கே நுழைவதும் முறையன்று. வழிபடுகின்ற அனைவர்க் கும் இடைஞ்சலாக இராமல் உதவி செய்ய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. பிறர் வழிபாட்டிற்கு இடையூறு விளைவிப்பவன் இறைவழிபாட்டிற்குப் புறம்பாய் விடுகின் 8. ஒவ்வொரு கடவுளுக்கும் தனித் தனி வாகனம் உண்டு