பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் றான் பக்தன். பிறர் வழிபாட்டிற்கு வேண்டிய வசதிகள் செய்பவன் வழிபாட்டில் முன்னேற்றமடைகின்றான். இவை கருத்தில் இருத்தவேண்டியவை. கருவறை கோவிலின் கருவறை இருள் சூழ்ந்துள்ளது. காற்றுக்கும் கதிரவன் ஒளிக்கும் அங்கு இடம் இல்லை. இவற்றிற்கெல்லாம் ஆகமவிதிகள் இடம் தருவதில்லை என்பர் கோயிலை நிறுவும் ஸ்தபதிகள். நமது உடலமைப்பின் புறச் சின்னமாக அமைந்துள்ளது கருவறை. கருவி கரணங்களை ஒடுக்கி மனத்தை உள்முகமாகத் திருப்பினால் உண்டாகும் அநுபவத்திற்குச் சின்னமாக அமைந்திருப்பது கருவறை யாகும். கண்மூடியிருக்கும்பொழுது உடலுக்குள்ளே இருக்கும் நம் நெஞ்சத்துள் காணப்படுவது ஒரே இருள் மயம். புறஉலகி லிருந்து ஆன்மஒளி வருவதில்லை. தரிசனத்திற்காகப் பக்தின் திருக்கோயிலில் காண்பவை: முதலில் திரை மூடப்பெறு கின்றது. சிறிது நேரத்தில் மணி ஒலி நம் செவியில் படுகின்றது. விரைவில் தரிசனம் கிட்டும் என்று பக்தன் ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளான். திரை நீங்குகின்றது. உள்ளே கர்ப்பூர ஆராதனை காட்டப்பெறுகின்றது. அதன் ஒளியில் பக்தன் தெய்வத்தின் திருமேனியைக் காண்கின்றான். திருமேனி என்ற எண்ணம் அவன் மனத்தில் எழுவதில்லை. இறைவனையே தரிசிப்பதாக உணர்கின்றான். மேலே காட்டிய காட்சி மனதுக்குள் நிகழவேண்டிய ஞானக்காட்சியின் புறத்தோற்றமாகும் இது. மனத்தினுள் சிந்தை யைச் செலுத்தும் ஆன்மசாதகன் (பக்தன்) கார் இருளையே தன்னுள் காண்கின்றான். ஆயினும், மனத்தை உள்முகத்தில் வைத்திருக்கப் பழக வேண்டும் (இதுவே தியானம் என்பது): இந்தப் பழக்கம் உறுதிப்பட நெடுங்காலம் ஆகும். பழகுபவ னுக்கு ஓர் அற்புதமான அநுபவமும் கிட்டும். தனது உள்ளத்