பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 3.81 தினுள்ளே ஒருவித இனிய ஓசையைக் கேட்பான் புகை போன்றும், மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் போன்றும் சிலகாட்சிகள் தன்னுள் தென்படுவதைக் காண்டான். ஒலி ஒளி ஆகிய இரண்டும் மனத்தில் உதிப்பது சாதகன் தன் சாதனை யில் முன்னேறி வருவதன் அறிகுறியாகும். இறுதியில் மனத்தின் அஞ்ஞானத் திரை நீங்குவதை அறிகின்றான். ஞான ஒளியின் தரிசனம் கிட்டுவதை உணர்கின்றான். அந்த ஞானமும் ஆன்ம சொரூபமும் ஒன்றேயாகும். இங்ங்னம் மனத்தகத்து உண்டாகின்ற ஆன்ம தரிசனத்துக்குப் புறச் சின்னமாக அமைந்திருப்பதே இந்த ஆலய தரிசனம். மாந்தருக்குத் தக்கவாறு அதை மாற்றியமைப்பதற்கு ஆகம சாத்திரம் இடம் தருவதில்லை. வேண்டுமானால் நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அஃது ஆன்மதரிசனத்தின் புறச் சின்னமாகாது. மனநிலை ஆலயவழிபாட்டிற்குச் செல்லும் பக்தனின் மனநிலை எப்படியிருக்க வேண்டும்? மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் ஆலயத்திற்குப் போக வேண்டும் என்பது கோட்பாடு. ஆலயத்திற்குள் நுழையும் பொழுதே உலகவிவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இறைவனைப்பற்றிய சித்தனையே சித்தமிசை குடி கொண்டிருக்கச் செய்து கொள்ள வேண்டும். பதைபதைப் புக்கோ வேகம் நிறைந்த நடமாட்டத்திற்கோ ஆங்கு இடம் இல்லை. அமைதியும் சாந்தமும் வடிவெடுத்தவனாக வழி படுபவன் ஆகிவிடுகின்றான். திருக்கோயிலுக்குள் கூச்சலிட் டுப் பேசுவோர் வழிபடுபவர் ஆகார். இவர்கள் திருக் கோயிலின் புனிதத் தன்மையையும் ஒருவகையில் பாழ்படுத்து கின்றனர். ஒருவரோடொருவர் பேசாதிருந்து வழிபாடு முடித்தானபிறகு ஒர் இடத்தில் அமைதியாக அமைர்ந்திருந்து தியானம் செய்வது முற்றிலும் இன்றியமையாதது. பல