பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நுகர்வதற்கென்று பயன்படுத்துங்கால் அவை நல்ல ஆன்ம சாதனமாகின்றன. தெய்வ ஆராதனையில் கண்கொண்டு காண்பது சோதி சொரூபமான பரம்பொருள். இது மேலே காட்டப்பெற்றது. காதால் கேட்பது அவனிடத்திலிருந்து உண்டாகும் நாதம் ஓசை; அதற்குச் சின்னமாக மணியோசை யும் சங்கொலியும் அமைகின்றன. வேதம் ஓதுதல் ஆங்கு நிகழ்கின்றது. தேவாரம் - திருவாசகம் ஒதும் பாட்டொலியும் நம் காதில் விழுகின்றது. மூக்கால் நுகர்வது ஆராதனையோடு சம்பந்தப்பட்ட நறுமணங் கமழும் தூபமாகும். (சாம்பிராணிப் புகை). இறைவன்மீது சாத்தப்பெற்றுள்ள மலர்களின் நறுமண மும் மூக்குக்கு விருந்தாகின்றது. பரமனுக்குரிய மலர்மாலை நமக்கு வழங்கப்பெறும் போது தொட்டுணர்ந்து (நொப்புலம்) இன்புறுகின்றோம். நாவால் சுவைத்து மகிழ்வதற்கு அவ னுடைய பிரசாதம் வழங்கப் பெறுகின்றது. இங்ங்னம் ஐம்பொறிகளாலும் பரம்பொருள் நுகரப்பெறுகின்றார். இந்த நிகழ்ச்சியில் - பூசை முறைகளில் - ஆலயவழிபாடு - உச்ச நிலையை அடைந்து விடுகின்றது. உலகினை அறிவதற் கென்று அமைந்த பொறிகளைப் பரமனை அறிதற்கென்று மடைமாற்றம் செய்யப்பெறும்பொழுது அஃது உயர்ந்த நற்பழக்கமாக அமைந்து விடுகின்றது. தில்லை நடராசர் ஆலயம் திருக்கோயிலைப் பற்றிய விரிவான தத்துவம் தில்லையில் திரு நடனம் புரியும் நடராசர் ஆலயத்தில் அமைந்துள்ளது. உபாசனைக்குரிய மூர்த்தி யாகிய நடராசர் நான்கு தூண்களையுடைய ஒரு கொலு மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த நான்கு தூண்களும் நான்மறைகளின் சின்னமாகும். இதற்குச் சற்று முன்பு ஆறு தூண்களையுடைய மண்டபம் உள்ளது. இவை ஆறு சாத்திரங்களின் சின்னமாகும். இதற்குச் சற்று வெளியே பதினெட்டுத் தூண்களையுடைய மண்டபம் உள்ளது. இவை