பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 387 பதினெண் புராணங்களின் அறிகுறிகளாக அமைந்துள்ளன. நடராசரின் அருகில் செல்வதற்கு ஐந்து படிகளின்மேலே ஏறியாக வேண்டும். இவை சிவபெருமானின் திருநாமமாகிய ஐந்தெழுத்தின் (பஞ்சாட்சரம்) சின்னமாக அமைந்துள்ளன. நடராசரின் இடப்புறம் சிவகாமி அன்னையார் எழுந்தருளி யிருப்பதைக் காணலாம். வலப்புறம் சிதம்பர ரகசியம்’ அமைந்துள்ளது. இதிலும் மேலான கோட்பாடு புதைந்துள்ளது. பராசக்தியின் அருளால் நடராச மூர்த்தியாகிய பதியின் தரிசனம் கிட்டுகின்றது. பதி மனம் மொழியைக் கடந்து நிற்பதால் அஃது இரகசியம் என்று இயம்பப்பெறுகின்றது. சிதம்பரத்தில் நிகழும் தீபாராதனை இக்கோட்பாட்டை விளக்குகின்றது. தரிசனத்திற்காக திருக்கோயிலுக்குள் செல்லும் பக்தன் ஒருவன் கீழே விழுந்து தண்டம் சமர்ப்பிக்க விரும்புவானாகில் அதன் பொருட்டு அவன் ஒரு வாகனத்திற்குப் பின்புறம்பாக வந்துவிடவேண்டும். எல்லா வாகனங்களையும் தாண்டி உள்ளே சென்று பிறகு வீழ்ந்து வணங்குவதில்லை. சீவ போதத்தைக் கடந்தவன் பரம்பொருளில் ஒன்றாய் விடுகின் றான் என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும். (4) பூசை விதிமுறைகள் தெய்வத்தன்மை எய்துவதே தெய்வத்தை வணங்குவ தற்கு உபாயமாகின்றது. சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது சித்தாந்தக் கொள்கை. ஒருவன் எதைப் போற்றுகின்றானோ அதுவாகவே அவன் ஆய்விடுகின்றான். முறைப்படி கல்வியைப் போற்றுபவன் கல்விமானாய்- கல்விக்கு இருப்பிட மாய் - விடுகின்றான். பலத்தை நாடி உடற்பயிற்சி செய்வபவன் பலவானாய் விடுகின்றான். முயற்சியாலும் முறைப்படி