பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இறைவன் நம் உள்ளத்தில் சிறப்பாக இயங்குவதை அறிகின்றோம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்ற திருமூலரின் வாக்கு ஆழ்ந்த பொருளுடையது எல்லாப் பெரியார்களுமே மானுட உடல் தேவாலயங்களுள் சிறந்ததென்று வற்புறுத்தி உள்ளனர். நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே' என்பது தாயுமானஅடிகளின் திருவாக்கு. காயமே கோயி லாகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலாய் நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈச னார்க்குப் போற்றஇக் காட்டி னோமே? என்பது அப்பரடிகளின் அமுத வாக்கு. மேலும் அப்பெரு மான், - உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிக் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே." என்று அருள்வதும் உளங்கொள்ளத் தக்கது. 14. திருமந்திரம் ஏழா. தந். சிவபூசை - 1 15. தாயு.பா. பராபரக்கண்ணி-15 16. அப்பர் தேவாரம்-4-76;4. 17. மேலது 4-75:4