பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 401 பூசனையின் பெரும்பயன் என்பதை உளங்கொள்ளல் வேண்டும். மனிதன் நாடோறும் இறைவனைப் போற்றக் கடமைப் பட்டவன். போற்றும் அளவு புனிதம் அவன்பால் வந்து எய்துகின்றது. அதனால் வாழ்க்கையே ஓயாது புதுப்பிக்கப் பெறுகின்றது. பொருளைத் தேடும் மனிதன் பொருட் பெருக்கை உணர்வது போன்று இறைவனை முறையுடன் வழுத்துபவன் மேம்பாடு அடைவதை அவனே உணர்கின்றான். நாள் ஏற ஏறப் புதிய ஆனந்தம், புதிய உற்சாகம், புதிய அமைதி, புதிய வலிவு ஆகிய தெய்வ சம்பத்துகளுடன் வாழ்க்கை பொலிவு அடைந்து கொண்டு வருவது அவனுக்குத் தெளிவாய்ப் புலனாகும். இவ்வுலகம் உண்மையில் இருள் சூழ்ந்ததன்று. ஆன்மா உய்வதற்கென்றே அஃது இறைவனால் படைக்கப் பெற்றது. அதனால் அருளே. வடிவெடுத்ததென்பதை அவன் உணர்கின்றான். பூசை செய்வது புனிதம் அடைபவர் தங்கட்கு மட்டும் பயன்படுத்து பவர் அல்லர். அவர்களுடைய வாழ்வு உலகுக்கே அருள விருந்தாகும். அன்பர்பணி செய்யானை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும்; பராமபரமே - பராபரம் - 155 என்ற தாயுமானவர் திருவாக்கை சிந்தித்து உணர்தல் வேண்டும்.