பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள் 25 நோக்கித் தமது விரலால் சுட்டிக்காட்டி அவர்தான் நின்ற நிலையில் ஆணவ வடிவத்தை விளக்கினர் என்பதைக் குறிப்பித்தருளினர். அந்தச் சிவஞானக் கதிரவனது அருள் நோக்கால் மலவிருள் அகலப் பெற்றவராய் உண்மையுணர்ந்து அச்சைவ நாதரது திருவடியில் தாழ்ந்திறைஞ்சித் தமக்கு ஞானம் நல்க வேண்டுமென்று குறையிரந்தார். அவ்வாதி சைவ முதல்வருக்கு நமது ஞானக் கன்று உடனே திருநீறு அளித்து மெய்யுணர்வு அருளி சிவஞான போதப் பொருள் தெரித்துத் தமது நாற்பத் தொன்பது மாணவருள் முதல் ம்ாணவர்கும் பெற்றி நல்கினார். மெய்கண்டார் தமக்குச் செய்த பெரு நன்றியை அருணந்தி சிவம் தாம் சிவஞான போதத்திற்கு வழி நூலாக இயற்றிய சிவஞான சித்தியார் பாயிரத்துள்ளும் (2. இருபா இருபஃது என்னும் சித்தாந்த நூலினுள்ளும் மிகவும் அழகு பெற வியந்து துதித்துள்ளார். - சிலகாலங்கழித்து அருணந்திசிவம் தமது மாணவர் களுள் சிறந்தவராகிய மறைஞான சம்பந்தருக்கு ஞானோப தேசம் செய்தபின் பரசிவோக பாவனையால் அகண்ட பரி பூரணமான நிலையை எய்தனர். ம்ெய்கண்ட தேவரைச் சிவபெருமானுடனும், இவரை நந்தி தேவருடனும் ஒப்பிட்டுப் போற்றுவர் சைவப் பெருமக்கள். (5) மறைஞான சம்பந்தர். இவர் திருப்பெண்ணாகடத் தில் பராசர முனிவர் பரம்பரையில் தோன்றியவர். மறைகள் அனைத்தையும் கற்றுத் தெளிந்தமையால் மறைஞான சம்பந்தர் எனப் பெயர் பெற்றவர். தில்லைவாழ் அந்தணருள் ஒருவர். இவர் அருணந்திதேவரிடம் சென்று ‘அடிசேர் ஞானம் பெற்றவர். இவர் தில்லையில் ஞான பூசை இயற்றி யிருக்கும் நாளில் உமாபதி சிவாச்சாரியாரது பக்குவநிலை