பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள். 27 இத்தகு பெருமை வாய்ந்த தில்லையில் உமாபதி சிவம் சிவாகமங்களையெல்லாம் இனிது கற்றுத் தவநெறியொழுகி இறைவனது ஒப்பற்ற திருவருள் பதிதற்குரிய பருவம் வாய்த்திருந்தார். ஒருநாள் அவர் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தமது இல்லத்திற்கு வழக்கமாக அமைந்த விருதுகளோடு சிவிகை மேல் செல்லலாயினர். அங்ங்ணம் செல்லுங்கால் வீதியிலே ஒரு தெருத்திண்ணையில் மறை ஞான சம்பந்தர் தமது மாணவரோடு வீற்றிருந்தனர். அவர் தமது சீடர்களை நோக்கி "பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுவது பாரீர்” என்று கூறினார். இச்சொற்களைக் கேட்ட உமா பதிசிவம், சிவிகையின்ரின்று விரைவில் இழிந்து மறைஞான சம்பந்தரின் திருவடியைப் பேரன்போடு தொழுது, அவர் சொன்ன கூற்றுக்குப் பொருள் வினவினார். சம்பந்தரும் விளக்கினார். அதன் பொருள் தெரிந்த பின்பு அவர்தம் திருவடித் தொண்டு பூண்டு உமாபதிசிவம் ஒழுகலாயினர். உமாபதிசிவம் சிவஞானப் போதொன்றனையே விரும்பிச் சாதிகுலப் பிறப்பென்னும் தடஞ்சுழியைக் கடந்து நினறார். ஒரு நாள் சீடரின் பக்குவம் அறிதற் பொருட்டு மறை ஞானசம்பந்தர் கைக்கோளர் தெருவிற் சென்று பாவில் செலுத்திய கூழின் மிச்சத்தை விடாய் தணித்தற் பொருட்டு வாங்கி உண்டார். அப்போது அவர்தம் புறங்கையில் ஒழுகிய மிச்சத்தை உமாபதி சிவம் ஏந்திப் பருகினார். உடனே மறைஞான சம்பந்தர் அவருக்கு ஞானோபதேசம் செய்து சிவஞான போதப்பொருள் உணர்த்தினர். இவர் இங்ங்னம் மரபு கடந்து ஞானம் பெற்றதன் சிறப்பை உணராது ஏனைத் தில்லை வாழ் அந்தணர்கள் இவரைக் குல முறை பிறழ்ந்தவராகக் கொண்டு 5. பட்ட கட்டை-சிவிகை, பகற்குருடு-பகலில் உபசாரவிருதாக விளக்கெடுத்து சென்றதன் காரணமாக வந்தது. இதனால் உணர்த்தப் பெற்றது நிலையாமை என்பது.