பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தத்துவங்கள்-1 (பதி) () சித்தாந்தத்தில் இறைவன் சைவ சித்தாந்தத்தில் முடிந்த முடியாகக் கொள்ளப் படும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்பவனவாகும். இவை என்றும் உள்ள பொருள்கள். இவற்றை, பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின் பதியினைப் போற்பசு பாசம் அநாதி" என்று தெளிவு படுத்துபவர் திருமூலர். ‘பதியாகிய பொருள் (கடவுள்) என்று உண்டோ, அன்றே பசுவாகிய உயிர்கள் உண்டு. அன்றே அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பாசமும் உண்டு’ என்பது சைவசித்தாந்தத்தின் முடிந்த முடியாகும். இங்குப் பதியைப் பற்றிய சித்தாந்தக் கருத்துகள் விளக்கப் பெறும். (1) பதி உண்டு என்பது, வைதிக சமயங்கள் யாவும் 'கடவுள் உண்டு என்ற கொள்கையை உடையன. கடவுள்' என்ற தனித் தமிழ்ச் சொல்லின் பொருளிலேயே சைவசித்தாந்தக் கருத்து பெரிதும் அடங்கியுள்ளது என்று அறிஞர் காட்டுவர். பதி உண்மையை சித்தாந்திகள் சற்காரிய வாதம்' என்ற 4. திருமந்திரம்-உபதேசம்-3 5. காரியங்கள் பலவும், தோற்றத்திற்கு முன்னும் தத்தம் காரணங்களில் உள்ளனவே என்பது சற்காளியவாதம். சத்உள்ளது; சற்காரியம்-உளதாகிய காரியம். இல்லது தோன்றும் என்பவர் அசற்காரியவாதிகள் ஆவர்.