பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கொள்கையின் அடிப்படையில் மெய்ப்பிப்பர். ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருந்தேயாக வேண்டும் என்பதை இதற்கு மேலும் ஒரு படி சென்று காரண நிலையிலும் ஒரு காரியம் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம். காரியம் எங் கிருந்தோ திடீரென்ற புதிதாகத் தோன்றுவது அல்ல. அஃது உற்பத்திற்கு முன்னரும் உள்ளது. இதுவே சற்காரியவாதம். இதனைத் தெளிவாக்கலாம். காணப்பட்ட இதனையே உலகம் இதற்குமுன் ஒடுங்கிய நிலையில்-காணப்படாத நுண்ணிய குக்கும் நிலையில்-இருந்தது. பின்னர் காணப்படும் பரு துல) நிலையை அடைந்துள்ளது. இனி, முன் போலவே ஒடுங்கி நுண்ணிலையை அடையும். ஆகவே உலகம் என்றும் யாதேனும் ஒரு நிலையில் உள்ளதேயன்றி, இல்லாது ஒழிவதில்லை என்பது தெளியப்படும். மேலும் விளக்கம்: காணப்படாத நுண்ணிலையில் இருந்த உலகம் காணப்படும் பருநிலையை அடையும் பொழுதுதான் பயன் உண்டு. ஆதலால் நுண்ணிலையில் உள்ளதாகிய உலகம் பருநிலையில் தோன்ற வேண்டுவது இன்றியமையாததாயிற்று. இங்ங்னமே, நுண்ணிலையில் இருந்த உலகத்தைப் பருநிலைக்குக் கொணர்ந்தவன் இறை வன், ஆதலின் இவ்வுலகத்தைப் படைத்தவன் ஒருவன் உளன்’ என்பது பொருந்துவதாகின்றது. இதனால் நாம் தெளியும் பொருள் இது தோற்றம்’ என்பது காணப்படாத நுண்ணிலையின் நீங்கிக் காணப்படும் பருநிலையை அடைவது; நிலை என்பது காணப்படும் நிலையில் இருத் தல் ஆகும் அழிவு' என்பது காணப்பட்ட பருநிலையின் நீங்கி முன்போல காணப்படாத நுண்ணிலையை அடைதல் ஆகும். இதனைச் சுருக்கமாக இல்லது தோன்றாது; உள்ளது அழியாது’ என்றும் கூறலாம். இதுவே சற்காரியவாதத்தின் சுருக்கம் ஆகும்.