பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 39 என்றால் அவ்வாறு செய்வது காரியப் பிரபஞ்சத்தைத்'தான் எனவும், காரணப் பிரபஞ்சம் அநாதி நித்தியம் எனவும் பகுத்துணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும். காரியப் பிரபஞ் சம் தோற்ற ஒடுக்கங்களை உடையதாயினும், காரணப் பிரபஞ் சத்திற்கு அவை இல்லாமையால் அஃது அநாதி நித்தி மேயாம் என்பது தெளிவு. - (2) உலகத் தோற்றத்திற்குக் கருத்தா ஒருவன் உளன் ‘உலகம் தானே தோன்றிற்று எனக் கொள்ளலாகாது. ஏனெனில், உலகத்தை இல்பொருள் என்க்கொள்ளாது உள்பொருள் எனக் கொண்டது எதனால்? இல்லது தோன்றாமையை அறிந்த கருதலளவை பற்றியன்றோ? உலகம் உள்பொருள் என்றற்கும், உலகத்திற்குக் கருத்தா ஒருவன் உண்டு என்பதற்கும் முற்றிலும் தொடர்பு உண்டு. இல்லது தோன்றாது என்பது போல், உள்ளது, அதனைத் தோற்றுவிக்கின்ற முதல்வன் ஒருவன் இல்லாமல் தோன்றாது என்பதும் ஒரு பேருண்மையாகும். இவ்வுண்மை காட்சியளவையிலேயே எளிதில் விளங்கும். - - எடுத்துக்காட்டு விளக்கம் குடம், ஆடை அணிகலன், முதலியன காரியப் பொருள்கள் என்பதை நாம் அறிவோம். இவற்றின் காரணப் பொருள்கள் இன்னவை என்பதும் நமக்குத் தேரியும். அதாவது, குடம் மண் என்னும் காரணப் பொருளி விருந்து தோன்றியது ஆடை நூல் என்னும் காரணப் பொருளிலிருந்து உண்டானது அணிகலன், பொன், வெள்ளி போன்ற உலோகங்களிலிருந்து புதிய உருவம் கொண்டது. இவற்றைச் சற்காரியவாதப்படி நோக்கினால், தோற்றத்திற்கு முன்னும் அவை முறையே மேற்குறிப்பிட்ட காரணப் பொருள்