பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 45 கடவுள் தொழிற்படுத்தும் தலைவனும் காரியராகிய ஏனையோர் அவனால் தொழிற்படுத்தப் பெற்று அவன் ஏவல் வழி நிற்போரும் ஆதல் வெள்ளிடை விலங்கலெனத் தெள்ளிதிற் புலனாகின்றதன்றோ? இவற்றையெல்லாம் கருதியே மெய் கண்ட தேவர் ‘சங்காரகாரணனாயுள்ள முதலையே முத லாக உடைத்து இவ்வுலகம்" என்று கூறினார். இக்காரணங் களால் முதற்கடவுளைச் சங்காரத் தொழில் புரிபவனாகவும், முதுகாட்டில் உறைதல், சுடலைப் பொடிபூசல், என்பு மாலை யையும் அணிதல் முதலிய கோலங்களையும் உருத்திரன்' என்ற திருப்பெயரையும் உடையவனாகக் கூறுதல் ஆன்றோர் வழக்காயிற்று என்பது உணரப்படும். மூலபல வதைப் படலத் தில் அனைவரையும் கொன்றொழித்து இராமன் தனியே போர்க்களத்தில் நின்ற காட்சியைக் கம்பன், திமொய்த்த அனைய செங்கண் அரக்கரை முழுதும் சிந்திப் பூமொய்த்த கரத்த ராகி விண்ணவர் போற்ற நின்றான் பேய்மொய்த்து நரிகள் ஈண்டிப் பெரும்பினம் பிறங்கித் தோன்றும் ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற்று இறைவன் ஒத்தான்" என்ற பாடலால் காட்டுவான். இராமனை ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற்று இறைவனுடன் ஒப்புமைப் படுத்திக் காட்டியுள்ளதைக் காண்கின்றோம். 'அழித்தற் கடவுளே முதற்கடவுள் என்ற உண்மையை உணர்ந்த பின்னர், அவனை ஒரு தொழிற்கு மட்டிலும் 11. சி.ஞா.போ. சூத்.1. வார்த்தி.1. - 12. உருத்திரன்- 'துக்கத்தை நீக்குவோன்’ என்பது பொருள் 13. கம்பரா. புத்த மூலபல வதை-231