பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உரியவன் என நினையாது முத்தொழிற்கும் முதல்வனாக உணர்தல் வேண்டும். ஆகவே 'சங்கார காரணன் என்ற திருப்பெயர் உருத்திரனைக் குறியாது மூவரினும் மேம்பட்டவ னான சிவபெருமானையே குறிப்பதாகும் என்பது உணரப் படும். இக்கருத்தினை மெய்கண்டாரும், நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது நின்றுளத்தில் கண்டிறைவன்-ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுரைக் கண்டவரில் இற்றிட்டாய் கட்டு.' (நொடித்தல்-அழித்தல்) என்ற வெண்பாவில் விளங்கக் கூறியிருத்தலால் தெளியலாம். (4) பதியின் இருநிலைகள் பதியின் சிறப்பியல்பை சொரூப இலக்கணம் என்றும் பொது இயல்பை தடத்த இலக்கணம் என்றும் சித்தாந்தம் பேசும் முப்பொருள்களில் பதி ஏனையவற்றைவிடப் பேராற் றல் வாய்ந்தது; சுதந்திரம் உடையது; எந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல், என்றும் ஒரே பெற்றியதாய் இருப்பது. இதுபற்றியே பதியை வடமொழியில் சித் என்றும் அருந்தமிழில் மெய்ப்பொருள்', 'செம்பொருள் என்றும் வழங்குவர். சத்' என்பதை உள்ளது' என்று மொழி பெயர்த் துப் பேசுவர் சித்தாந்திகள். உள்ளது என்பதை என்றும் ஒரு பெற்றியதாய் உள்ளது என்று கொள்ளல் வேண்டும். ஆகவே, பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்னையே தான் நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகளே TA FIG. Gum. சூத்1. அதிகர. 2. உதாரணம் 4 வெண்பா. 15. சொரூபம் - தன் இயல்பு தடத்தம் - அயலிலுள்ள பொருட்கண் இருப்பது. -