பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பாசநீக்கம், முடிவில் ஆற்றல், பேரருள் உடைமை, வரம்பிலின்பம் உடைமை" இவையே வடமொழியில் சுதந்திரம், விசுத்த தேகம் அனாதி போதம் சர்வஞ்ஞதை, நிராமயம், அனந்த சத்தி, அலுத்த சக்தி, திருப்தி என்று நுவலப்பெறும். இக்கூறிய எட்டில் துயஉடம்பு, பாசங்களின் நீக்கம் இவையின்றியாயினும் இயற்கை உணர்வை முற்றும் உணர்தலாலும், துய உடம்பைப் பாசங்களின் நீங்குதலிலும் அடக்கியாயினும் ஆறாகக் கூறும் மரபும் உண்டு. இன்ன சிறப்பியல்புகள் சொல்லப்படும் இடத்தில் சிவம் பரசிவம் என்று வழங்கப்பெறும். தாயுமான அடிகளின் பரசிவ வணக்கம் முதற்பாடலில்" சிவத்தின் சொரூப இயல்பு நுவலப் பெற்றிருப்பதைக் கண்டு தெளியலாம். பதியின் தடத்த இலக்கணம். இது குணம் குறிகளோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் பரசிவம்: அந்நிலையினின்றும் நீங்கி உலகத்தை நோக்குங்கால் தனது சிறப்பியல்புகளில் ஒன்றாகிய பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தனது விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை)க் கொண்டு பல்வேறு நிலைகளை உடையதாக இருக்கும். இந்த நிலைகளே பதியின் தடத்த நிலைகளாகும். இவை யாவும் பதியின் அனந்த சக்தியாகிய அளவில்லாத ஆற்றலால் வருவனவாதலின், பதியின் தடத்த நிலைகள் யாவும் அதன் சக்தியினால் ஆவனவாகும். இதனால் சொரூபநிலையில் பதி 'சிவம் என்றும், தடத்த நிலையில் ‘சக்தி' என்றும் பேசப்படும். சொரூப நிலையில் சக்தி செயற் படாது அடங்கியிருத்தலால் பதி 'சிவம் என ஒன்றேயாக இருக்கும். சக்தி செயற்படும் தடத்த நிலையில் சிவம் 18. குறள் -9இல் எண்குணத்தான் என்பதற்கு இவற்றையே காட்டுவர் பரிமேலழகர். - 19. அங்கிங்கெனாதபடி - (1)