பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதங்காக்கும் மகாசக்தி-அன்னை அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம் துவளா திருத்தல் சுகம். எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம்-பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்தது காண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு." என்ற பாடல்களை நோக்கி இதனை அறியலாம். மற்றும், சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம், இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே’ என்ற தாழிசையிலும் இதனைக் கண்டு தெளியலாம். பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தி யில் ஒரு சிறுகூறு உலகத்தைத் தொழிற்பட முற்படும் அதனை "ஆதிசக்தி' என வழங்குவர். இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்புகளில் செலுத்தி நிற்றலால் 'திரோதான சக்தி என்ற திருப்பெயரையும் உடையது. திரோதானம் - மறைப்பது. இந்தச் சக்தியையே பாரதியார், பரிதியென்னும், பொருளிடை யேய்ந்தனை; பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை, கரிய மேகத் திரளெனச் செல்லுவை. காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை; சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை; 22. தோ.பா. மகாசக்தி வெண்பா - 1, 4 23. மேலது வையமுழுதும் - 5